Published:Updated:

Shah Rukh Khan: நள்ளிரவில் குவிந்த ரசிகர்கள்; உற்சாகமான ஷாருக் கான்!

ரசிகர்களின் வாழ்த்தை பெற்ற ஷாருக்கான்

நடிகர் ஷாருக் கானின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்துகள் தெரிவிக்க அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

Shah Rukh Khan: நள்ளிரவில் குவிந்த ரசிகர்கள்; உற்சாகமான ஷாருக் கான்!

நடிகர் ஷாருக் கானின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்துகள் தெரிவிக்க அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

Published:Updated:
ரசிகர்களின் வாழ்த்தை பெற்ற ஷாருக்கான்

பாலிவுட் பாட்ஷா நடிகர் ஷாருக்கானுக்கு இன்று 57வது பிறந்தநாள். இதையொட்டி வழக்கம்போல் இந்த ஆண்டும் நேற்று இரவிலருந்து ரசிகர்கள் ஷாருக்கான் வீட்டின் முன்பு கூடியிருந்தனர். ஷாருக்கான் தனது வீட்டு பால்கனியில் நின்று கொண்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார். தனது மகன் ஆப்ராமுடன் வந்து பிறந்த நாள் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார். ஷாருக்கானின் பிறந்தநாளையொட்டி மும்பை பாந்த்ரா பகுதியில் ரசிகர்கள் ராட்சத பேனர்களை வைத்திருந்தனர். ஷாருக்கான் இந்த பிறந்த நாளை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை ஷாருக்கான் மனைவி கவுரி கான் செய்துள்ளார்.

பிறந்தநாள் பேனர்
பிறந்தநாள் பேனர்

ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் பதான் படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திரைக்கு வருகிறது. இதில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்துள்ளார். ஷாருக்கானின் பிறந்தநாளையொட்டி பதான் படத்தின் ஸ்டில் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. படக்குழு பதான் படத்தின் டீசரை வெளியிட்டிருக்கிறது. அதில் ஷாருக்கானுடன் பால்கனியில் நின்று கொண்டு தீபிகா எதையோ குடிப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருக்கிறது. ஷாருக்கானுடன் சேர்ந்து நான்காவது படத்தில் தீபிகா படுகோனே பதான் படத்தில் நடித்துள்ளார்.

பதான் ஸ்டில்
பதான் ஸ்டில்

இப்படத்தில் ஜான் ஆபிகராமும் நடித்திருக்கிறார் .சமீபத்தில்தான் இயக்குநர் அட்லியின் ஜவான் படத்தில் நடிப்பதற்காக ஷாருக்கான் ஒரு மாதம் சென்னையில் முகாமிட்டுவிட்டு மும்பை திரும்பினார். ஜவான் படத்தை ஷாருக்கானே தனது கம்பெனி மூலம் தயாரிக்கிறார்.