Published:Updated:

57வது பிறந்தநாளை ரசிகர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய நடிகர் ஷாருக்கான்!

கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்

நடிகர் ஷாருக்கான் தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் கேக் வெட்டிக்கொண்டாடினார்.

57வது பிறந்தநாளை ரசிகர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய நடிகர் ஷாருக்கான்!

நடிகர் ஷாருக்கான் தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் கேக் வெட்டிக்கொண்டாடினார்.

Published:Updated:
கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்

நடிகர் ஷாருக்கானுக்கு நேற்று 57வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளை ஆண்டு ஷாருக்கான் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் உற்சாகமாக கொண்டாடினார். நேற்று முன் தினம் இரவே தனது வீட்டின் முன்பு கூடியிருந்த ரசிகர்களை பார்த்து அவர்களது வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார். நேற்று முழுக்க பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்த ஷாருக்கான் மும்பை செயின்ட் ஆண்ட்ரூஸ் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மாணவர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியதோடு மாணவர்கள் மத்தியில் உயிரே படத்தின் பாடலுக்கு நடனமாடினார். மாணவர்கள் ஷாருக்கான் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடினர். மாணவர்களோடு சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியிருக்கிறது.

மாணவர்களுடன் ஷாருக்கான்
மாணவர்களுடன் ஷாருக்கான்

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியாக தனது பதான் படத்தின் டீசரையும் வெளியிட்டார். இப்படம் ஜனவரி 25ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. டீசரை பார்த்து பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள பதான் படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, துபாய், ஸ்பெயினில் நடித்தி முடிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு படம் திரைக்கு வருவதால் ஷாருக்கான் இந்த பிறந்த நாளில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார். பதான் படத்தில் ஷாருக்கான் ரா உளவு ஏஜென்டாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் சல்மான்கானும் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் குறித்து படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் கூறுகையில், ``ஷாருக்கான் ரசிகர்களின் மனதில் ஆட்சி செய்கிறார். அவர்களை ஷாருக்கானின் பிறந்தநாளில் மகிழ்ச்சிபடுத்த வேண்டும் என்பதற்காகத்தான் பிறந்தநாளில் டீசர் வெளியிடப்பட்டது. இப்படம் வெறும் படம் அல்ல அது ஒரு உணர்வு" என்று தெரிவித்தார். ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தின் படப்பிடிப்பும் பெருமளவு முடித்து விட்டது.