Published:Updated:

ஷாருக் கான்: `ரூ.200 கோடி பங்களா; ரூ.25 லட்சம் செலவில் பெயர்ப் பலகை' - மன்னட்டில் குவியும் ரசிகர்கள்

ஷாருக்கான் வீட்டுப் பெயர்ப் பலகை (புதிது)

நடிகர் ஷாருக்கான் தனது வீட்டிற்கு ரூ.25 லட்சம் செலவில் புதிய பெயர் பலகை வைத்துள்ளார்.

Published:Updated:

ஷாருக் கான்: `ரூ.200 கோடி பங்களா; ரூ.25 லட்சம் செலவில் பெயர்ப் பலகை' - மன்னட்டில் குவியும் ரசிகர்கள்

நடிகர் ஷாருக்கான் தனது வீட்டிற்கு ரூ.25 லட்சம் செலவில் புதிய பெயர் பலகை வைத்துள்ளார்.

ஷாருக்கான் வீட்டுப் பெயர்ப் பலகை (புதிது)

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடந்த சில மாதங்களாக பதான் படம் மற்றும் அட்லியின் புதிய படத்தில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் பதான் படம் வெளியாக இருக்கிறது. இப்பணிகளுக்கு இடையில் தனது வீட்டின் பெயர் பலகையையும் புதிதாக மாற்றி அமைத்திருக்கிறார். ஏற்கனவே பாந்த்ரா கடற்கரை அருகில் இருக்கும் ஷாருக்கான் பங்களா சுற்றுலா தலம் போல இருக்கிறது. பாந்த்ரா கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஷாருக்கான் பங்களா அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஷாருக்கான் பங்களாவின் பெயர் மன்னத் லேண்ட் எண்ட் ஆகும். இதற்கு முன்பு பெயர் பலகை நேர் கோட்டில் இருந்த நிலையில் புதிதாக அமைக்கப்பட்டு இருக்கும் பெயர் பலகை செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளது. இப்பெயர் பலகை ரூ.20 முதல் 25 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

பழைய பெயர் பலகை
பழைய பெயர் பலகை

இது குறித்து ஷாருக் கான் தரப்பில் கேட்டதற்கு, ``ஷாருக் கானின் மனைவி கௌரி கான் தங்களது குடும்பத்தின் பிரபலம் மற்றும் பெயருக்கு ஏற்றபடி வீட்டின் பெயர்ப்பலகை இருக்கவேண்டும் என்று விரும்பினார். எனவேதான் அவரே பெயர் பலகையை வடிவமைத்துள்ளார்.

இந்த பெயர் பலகை அமைக்கப்பட்டதில் ஷாருக் கானுக்கு எந்த பங்கும் கிடையாது. குடும்பத்தின் தலைவர் கௌரி கான் என்பதால் அவர் எடுக்கும் முடிவை குடும்பம் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும் என்று ஷாருக் கான் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த புதிய பெயர் பலகை எல்இடி பல்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய பெயர் பலகை அருகில் நின்று ரசிகர்கள் செல்ஃபி எடுத்து வருகின்றனர். ஷாருக்கான் 2001-ம் ஆண்டு இந்த பங்களாவை 13.32 கோடிக்கு வாங்கினார். தற்போது அதன் மதிப்பு ரூ.200 கோடியாகும்.