Published:Updated:

ஷாருக்கான் டு கத்ரீனா கைஃப் - திருமணம், பிறந்த நாள் பார்ட்டியில் நடனமாட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஷாருக்கான்

திருமணம் மற்றும் பிறந்த நாள் பார்ட்டிகளில் பங்கேற்க வரும் நடிகர் மற்றும் நடிகைகள் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து பேசுவதோடு சிறப்பு விருந்துகளிலும் கலந்து கொள்கின்றனர். சில நேரங்களில் நிதி திரட்டவும் பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்கின்றன.

விஐபி, விவிஐபிக்களின் திருமணம் மற்றும் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகர், நடிகைகளை அழைத்து வந்து நடனமாட வைப்பது வழக்கம். இதற்கு நடிகர், நடிகைகள் கணிசமான அளவு பணம் வசூலிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் எவ்வளவு கட்டணம் வசூலிக்கின்றனர் என்பது குறித்து மர்மமாகவே இருந்து வந்தது.

இப்போது எவ்வளவு கட்டணம் வசூலிக்கின்றனர் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் ஷாருக்கான் திருமணம் மற்றும் பிறந்தநாள் பார்ட்டியில் நடனமாட ரூ.3 கோடி வசூலிக்கிறார். இதே போன்று நடிகை கத்ரீனா கைஃப் திருமணம், பிறந்தநாள் பார்ட்டி மற்றும் தனியார் பார்ட்டியில் நடனமாட ரூ.3.5 கோடி வசூலிக்கிறார்.

கத்ரீனா கைஃப்
கத்ரீனா கைஃப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ரூ.2.5 கோடியும், நடிகர் சல்மான் கான் ரூ.2 கோடியும் வசூலிக்கின்றனர். நடிகை தீபிகா படுகோன் மற்றும் அவரது கணவர் ரன்வீர் சிங் ஆகியோர் தலா ரூ.1 கோடி நடனமாட வசூலிக்கின்றனர்.

நடன நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை பிரியங்கா சோப்ரா ரூ.2.5 கோடியும், நடிகர் ரன்பீர் கபூர் ரூ.2 கோடியும், நடிகர் அக்‌ஷய் குமார் 2.5 கோடியும் கட்டணமாக வசூலித்து வருகின்றனர். திருமணம் மற்றும் பிறந்த நாள் பார்ட்டிகளில் பங்கேற்க வரும் நடிகர் மற்றும் நடிகைகள் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து பேசுவதோடு சிறப்பு விருந்துகளிலும் கலந்து கொள்கின்றனர். சில நேரங்களில் நிதி திரட்டவும் நடிகர் மற்றும் நடிகைகள் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்துக்கு பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்கின்றன.