Published:Updated:

மும்பை: 500 பேர் பங்கேற்ற பிரமாண்டமான படப்பிடிப்பு; நடிகர் ஷாருக் கான் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

ஷாருக் கான்

நடிகர் ஷாருக் கான் தனது புதிய படத்தின் காட்சியில் நடிப்பதற்காக 500 பேரை சேர்த்துக்கொண்டு அதிகாலையில் படப்பிடிப்பு நடத்தினார்.

மும்பை: 500 பேர் பங்கேற்ற பிரமாண்டமான படப்பிடிப்பு; நடிகர் ஷாருக் கான் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் ஷாருக் கான் தனது புதிய படத்தின் காட்சியில் நடிப்பதற்காக 500 பேரை சேர்த்துக்கொண்டு அதிகாலையில் படப்பிடிப்பு நடத்தினார்.

Published:Updated:
ஷாருக் கான்
நடிகர் ஷாருக் கான் கடந்த ஒரு மாதமாக சென்னையில் தங்கி இயக்குநர் அட்லியின் `ஜவான்' படப்பிடிப்பில் கலந்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மும்பை திரும்பினார். மும்பை திரும்பியதோடு அடுத்த படத்திற்கான வேலையைத் தொடங்கிவிட்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஷாருக் கான் படம் எதுவும் திரைக்கு வரவில்லை. எனவே அடுத்தடுத்து படங்களை வெளியிடவேண்டும் என்ற நோக்கத்தில் படப்பிடிப்புகளை தீவிரப்படுத்தி வருகிறார். `ஜவான்' படத்தைத் தொடர்ந்து துங்கி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதன் படப்பிடிப்பு இப்போது மும்பையில் நடந்து வருகிறது. இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இப்படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பின்போது பொதுமக்களின் இடையூறுகள் இருக்கக்கூடாது என்பதற்காக இரவு நேரங்களில் படப்பிடிப்புகளை நடத்தி வருகின்றனர்.

நடிகை டாப்ஸி
நடிகை டாப்ஸி

இதனிடையே 500 பேர் கலந்து கொள்ளும்படியான காட்சி ஒன்றை எடுக்க வேண்டியிருந்தது. இதனை அதிகாலையில் வைத்துக்கொண்டால்தான் ரசிகர்கள் தொல்லை இருக்காது என்று கருதி இதற்காக மும்பை போலீஸாரிடம், உள்ளூர் நிர்வாகத்திடமும் பிரத்யேக அனுமதி பெறப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. மும்பையின் புறநகர் பகுதியில் இருக்கும் ஒரு மைதானத்தில் இந்தப் படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 500 பேர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு இருக்கக்கூடாது என்பதற்காக காலை 5 மணிக்கு தொடங்கி 8 மணிக்குள் படப்பிடிப்பை முடித்தனர். இப்படத்தில் நடிகை டாப்ஸி ஷாருக் கானுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஏற்கெனவே ஷாருக் கான் நடித்து முடித்துள்ள `பதான்' படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்த ஆண்டு `ஜவான்' திரைக்கு வருகிறது.