Published:Updated:

ஷாருக்கான் கட்டியிருக்கும் ரூ.4.98 கோடி மதிப்புள்ள கடிகாரம் - அதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

ஷாருக்கான் கையிலிருக்கும் விலையுயர்ந்த வாட்ச்

நடிகர் ஷாருக்கான் தனது கையில் ரூ.4.98 கோடி மதிப்புள்ள விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை அணிந்திருக்கிறார். அதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

Published:Updated:

ஷாருக்கான் கட்டியிருக்கும் ரூ.4.98 கோடி மதிப்புள்ள கடிகாரம் - அதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

நடிகர் ஷாருக்கான் தனது கையில் ரூ.4.98 கோடி மதிப்புள்ள விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை அணிந்திருக்கிறார். அதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

ஷாருக்கான் கையிலிருக்கும் விலையுயர்ந்த வாட்ச்

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பதான்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வசூலிலும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்திருக்கிறது.

சமீபத்தில் அவர் 'பதான்' பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் அணிந்திருந்த கை கடிகாரம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் அமைந்திருந்தது. ஊதா கலரில் அவர் அணிந்திருந்த அந்த கை கடிகாரம் பல கோடி ரூபாய் மதிப்புடையதாகும்.

ஷாருக்கான்
ஷாருக்கான்

நேற்று 'பதான்' பட நாயகி தீபிகா படுகோன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ஸ்கின்கேர் திரவம் ஒன்றை ஷாருக்கானிடம் கொடுத்துப் பயன்படுத்திப்பார்க்கும்படி தீபிகா கேட்டுக்கொண்டார். ஷாருக்கானும் அதில் சிறிது எடுத்து தனது முகத்தில் தடவிக்கொள்வார். இந்த வீடியோவிலும் ஷாருக்கானின் கையில் அந்த விலையுயர்ந்த ஊதா கலர் கைக்கடிகாரம் இடம் பெற்றிருந்தது.

அந்தக் கை கடிகாரத்தின் விலை ரூ.4.98 கோடியாகும். அதை ஷாருக்கான் சுவிட்சர்லாந்தில் வாங்கியிருக்கிறார். அது புகழ்பெற்ற, பாரம்பர்யமிக்க ஆடெமர்ஸ் பிகுட் (Audemars Piguet) என்ற பிராண்ட் வாட்ச். இதன் மாடல் பெயர் 'ராயல் ஓக் காலண்டர் வாட்ச்' (Royal Oak Perpetual Calendar watch) என்று கூறப்படுகிறது.

1875-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் கடிகாரங்களுக்கு என்றே தனி மதிப்பு உண்டு. இதன் பெரும்பாலான தயாரிப்புகள் லிமிடெட் எடிஷன் என்பதால்தான் விலை விண்ணை முட்டுகிறது என்கிறார்கள். ஷாருக்கான் அணிந்திருக்கும் மாடலின் விலையை இப்போது இணையத்தில் பார்த்தபோது தோராயமாக ரூ.4.70 கோடி எனக் காட்டியது.

ஷாருக்கான் கையிலிருக்கும் விலையுயர்ந்த வாட்ச்
ஷாருக்கான் கையிலிருக்கும் விலையுயர்ந்த வாட்ச்

ஷாருக்கானின் மும்பை வீடும் மிகவும் ஆடம்பரமான ஒன்றாகும். மும்பை பாந்த்ரா பகுதியில் கடற்கரையையொட்டி இருக்கும் அவரின் மன்னத் பங்களாவின் மதிப்பு ரூ.200 கோடி என்கிறார்கள். இது தவிர ஷாருக்கானிடம் பிஎம்டபிள்யூ 6 மற்றும் 7 மாடல் கார்கள், ஆடி கார்கள் இருக்கின்றன. ஷாருக்கானுக்கு டெல்லியிலும், துபாயிலும் சொகுசு வீடுகளும் இருக்கின்றன. அதோடு சொந்தமாக ஐ.பி.எல் கிரிக்கெட் அணியும் வைத்திருக்கிறார். அந்த அணியில் நடிகை ஜுஹி சாவ்லாவுக்கும் சிறிய பங்கு இருக்கிறது.