Published:Updated:

`வலி மறந்து ஓய்வெடுங்கள் நண்பரே' -16 வயது மகனை இழந்த 2 மாதத்தில் நடிகரும் மரணம்; நண்பர்கள் உருக்கம்!

ஷிவ் குமார் சுப்பிரமணியம்

நிறைய படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர், ஷிவ் குமார் சுப்பிரமணியம். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தன் மகனை இழந்திருந்தார்.

Published:Updated:

`வலி மறந்து ஓய்வெடுங்கள் நண்பரே' -16 வயது மகனை இழந்த 2 மாதத்தில் நடிகரும் மரணம்; நண்பர்கள் உருக்கம்!

நிறைய படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர், ஷிவ் குமார் சுப்பிரமணியம். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தன் மகனை இழந்திருந்தார்.

ஷிவ் குமார் சுப்பிரமணியம்

2 States, Hichki, Nail Polish, Rocky Handsome உள்ளிட்ட பாலிவுட் படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் ஷிவ் குமார் சுப்பிரமணியம் நேற்று இரவு (ஏப்ரல் 10) உடல்நலக்குறைவால் இறந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இவரின் மகன் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இயக்குனர் பீனா சர்வார், "செய்தி கேள்விப்பட்டதும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. துக்கமானது, இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் ஷிவ்குமார் -திவ்யா மகன் ஜஹான் இறந்தான், 16 -வது பிறந்தநாளுக்கு 2 வாரங்களுக்கு முன்பு மூளை புற்றுநோய் அவனை எடுத்துக்கொண்டது" என ட்வீட் செய்து இருக்கிறார்.

ஷிவ் குமார் சுப்பிரமணியம் இரங்கல் பதிவு
ஷிவ் குமார் சுப்பிரமணியம் இரங்கல் பதிவு

கடைசியாக நெட்பிளிக்ஸில் வெளியாகிய மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் படத்தில் ஹீரோயினுக்கு அப்பாவாக நடித்திருந்தார், ஷிவ்குமார். உதவி இயக்குனராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் நிறைய படங்களில் பங்காற்றியுள்ளார். 2 States படத்தில் ஆலியா பட்டுக்கு அப்பாவாக நடித்திருந்தார். Tu Hai Mera Sunday படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பெற்றது. நடிகை Ayesha Raza Mishra, "அமைதியாக இளைப்பாறுங்கள் ஷிவ். வேறு என்ன சொல்ல முடியும். வலி மறந்து ஓய்வெடுங்கள் நண்பரே" எனப் பதிவிட்டுள்ளார்.

இன்று காலை 10 மணிக்கு மும்பையில் அவரின் இறுதி சடங்குகள் நடைபெற இருக்கின்றன.