Election bannerElection banner
Published:Updated:

பாலிவுட்டில் குவியும் படங்கள்... விஜய் சேதுபதி செம ஹேப்பி அண்ணாச்சி!

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி மேலும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.

எப்போதும் சவாலான கதாபாத்திரங்களே விஜய் சேதுபதியின் சாய்ஸ். ஹீரோ, வில்லன், திருநங்கை என எந்த கேரக்டராக இருந்தாலும் முழுமூச்சில் இறங்கி அதிரடிக்கும் விஜய்சேதுபதிதான் இப்போது ஏகப்பட்ட இயக்குநர்களின் சாய்ஸாக இருக்கிறார். தமிழில் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு என மற்ற மொழிகளிலும் விஜய்சேதுபதிக்கு வாய்ப்புகள் குவிகின்றன.

விஜய் சேதுபதியுடன் கிஷோர்
விஜய் சேதுபதியுடன் கிஷோர்

குறிப்பாக இந்தியில் விஜய்சேதுபதிக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டேயிருக்கின்றன. முதலில் ஆமீர்கானுடன் லால்சிங் சத்தா படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர், சில நாட்களுக்கு முன்பு கேத்ரீனா கைஃப் கதாநாயகியாக நடிக்க இருக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானார். அடுத்து இப்போது இயக்குநர் சந்தோஷ் சிவனின் 'மும்பைகர்' படத்திலும் நடிக்க இருக்கிறார் விஜே. இதற்கடுத்து இயக்குநர் கிஷோர்பாண்டுரங் பேலேகரின் புதிய படத்திலும் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார். 'காந்தி டாக்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கிஷோர் பாண்டுரங் திரைக்கதை எழுதி இயக்கி, தயாரிக்கிறார்.

ஏற்கெனவே தமிழில் மிகவும் பரபரப்பாக இருக்கும் விஜய் சேதுபதி, இந்தியிலும் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பதில் அவரது ரசிகர்கள் செம ஹேப்பி. "விஜய் சேதுபதி கதையை முழுமையாக படித்து எனது நோக்கத்தை புரிந்து கொண்டதால் உடனே அதில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஒவ்வொரு இயக்குநரும் குறிப்பிட்ட குணாதிசயங்கள் உள்ள நடிகர்களைத் தேடுவது வழக்கம். அது போன்ற ஒரு நடிகரை பாலிவுட்டில் மட்டுமல்லாது வேறு பகுதியிலும் தேடினேன். அப்படித்தான் விஜய் சேதுபதியை கண்டுபிடித்தேன். விஜய் சேதுபதி ஒரு தனித்துவமானவர். படங்களுக்காக தனது இமேஜைக்கூட விட்டுக்கொடுக்ககூடியவர். எனவே அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று பேட்டியளித்திருக்கிறார் இயக்குநர் கிஷோர்.

தற்போது விஜய்சேதுபதி வெற்றிமாறன் இயக்கும் படத்தில் கொஞ்சம் வயதில் முதிர்ந்தவராக நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்துக்கான ஷூட்டிங் சத்யமங்கலத்தில் நடந்தது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு