Published:Updated:

வைரலாகும் ஜான்வி கபூரின் பெல்லி டான்ஸ் வீடியோ!

சனா

மறைந்த ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் பெல்லி டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஶ்ரீதேவி
ஶ்ரீதேவி

மறைந்த பாலிவுட் நடிகை ஶ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவரது நடிப்பில் 'தடாக்' திரைப்படம் பாலிவுட்டில் ரிலீஸானது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஹீரோ ஷாங் கேதான் விட்ட சவாலை ஏற்று ஜான்வி தன்னுடைய பெல்லி டான்ஸ் வீடியோவை சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார். தற்போது இந்த வீடியோவை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இவரது நடனத்தை பார்த்து வியந்து வருகின்றனர்.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

மேலும், இவர் இந்த வீடியோவை 'டான்ஸ் தீவானே' நடன நிகழ்ச்சிக்காகவும் வெளியிட்டிருக்கிறார். நடனத்திறன் கொண்டவர்கள் இதைப் போல் டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு நடுவர்களை எப்போதும் கவர்வார்கள். மாதுரி தீக்‌ஷித்தும் இதுபோல் ஒருமுறை செய்திருக்கிறார். தற்போது ஜான்வி கபூரும் இதே போல் தனது டான்ஸ் வீடியோவை #dancedeewane என்ற ஹேஸ்டேக்குடன் பதிவிட்டிருந்தார். தற்போது இவரது தந்தை போனிகபூர் அஜித்தை வைத்து 'நேர்கொண்ட பார்வை' படத்தை தயாரித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற இவரது இளைய மகள் குஷி கபூரின் புகைப்படம் சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் வைரலானது.