Published:Updated:

இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்ட கரீனா கபூர்; ரசிகர் கேட்ட கேள்விக்கு அதிரடி பதில்!

கணவர், நண்பருடன் கரீனாகபூர்

கரீனா கபூர் இத்தாலி செல்வதற்கு முன்பு இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டியைக் கண்டுகளித்து தங்களது உறவினர்களுடன் சேர்ந்து விடுமுறையை கொண்டாடியிருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்ட கரீனா கபூர்; ரசிகர் கேட்ட கேள்விக்கு அதிரடி பதில்!

கரீனா கபூர் இத்தாலி செல்வதற்கு முன்பு இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டியைக் கண்டுகளித்து தங்களது உறவினர்களுடன் சேர்ந்து விடுமுறையை கொண்டாடியிருக்கின்றனர்.

Published:Updated:
கணவர், நண்பருடன் கரீனாகபூர்
சைஃப் அலிகான் நடிகை கரீனா கபூரை 5 ஆண்டுகள் காதலித்தார். அதனை தொடர்ந்து 2012-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி திருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது கணவர் சைஃப் அலிகான் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இத்தாலியில் விடுமுறையைக் கொண்டாடி வருகிறார். இத்தாலி செல்வதற்கு முன்பு இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டியைக் கண்டுகளித்து தங்களது உறவினர்களுடன் சேர்ந்து விடுமுறையை கொண்டாடியிருக்கின்றனர். இத்தாலியில் விடுமுறை கொண்டாட்டத்தின்போது தனது இன்ஸ்டாகிராமில் தனது விடுமுறை கொண்டாட்டங்கள் குறித்து அடிக்கடி புகைப்படங்களை கரீனா கபூர் பகிர்ந்து வருகிறார். அதில் ஒரு படத்தில் கரீனா கபூர் மற்றும் தனது கணவர் மற்றும் நண்பர் ஒருவருடன் இருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அந்தப் புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், `என்ன மேடம் மூன்றாவது வாரிசா?' என்று கேட்க ஆரம்பித்தனர்.

கணவருடன் கரீனா கபூர்
கணவருடன் கரீனா கபூர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கு விளக்கம் அளித்துள்ள கரீனா கபூர், காய்ஸ் அமைதி... அமைதி..., நான் கர்ப்பமாக இல்லை. எனது கணவர் சைஃப் அலிகான் ஏற்கெனவே நாட்டு மக்கள் தொகைக்கு தேவைக்கு அதிகமான பங்களிப்பை செலுத்திவிட்டதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். கரீனா கபூருக்கு சைஃப் அலிகானுக்கு, தமூர் மற்றும் ஜஹாங்கிர் அலி கான் ஆகிய இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதுதவிர சைஃப் அலிகானுக்கு முதல் திருமணத்தின் மூலமும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் சாரா அலிகான் நடிகையாகிவிட்டார்.