Published:Updated:

கத்ரீனா கைஃப் திருமணம்: பிரமாண்ட ஏற்பாடு; போட்டோவுக்குத் தடை, உச்ச நடிருக்கு அழைப்பு இல்லை?!

கத்ரீனா கைஃப்
News
கத்ரீனா கைஃப்

பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் நிகழ்ச்சியை புகைப்படம் எடுக்கக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

நடிகை கத்ரீனா கைஃப் வரும் 9-ம் தேதி நடிகர் விக்கி கவுசலைத் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். இதற்காக ராஜஸ்தானில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் நிகழ்ச்சியை புகைப்படம் எடுக்கக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இத்திருமணத்திற்கு முன்பு மும்பை கோர்ட்டில் சம்பிரதாயத்திற்கு திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்துள்ளனர். இத்திருமணம் ஓரிரு நாட்களில் நடக்க இருக்கிறது. ராஜஸ்தானில் நடக்கும் திருமணத்தில் நடிகர் ஷாருக்கான் கலந்து கொள்வார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் கத்ரீனாவின் திரைப்பட வாழ்க்கையில் முக்கிய பங்காற்றிய நடிகர் சல்மான் கானுக்கு திருமணத்திற்கு வரும்படி அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

சல்மான்கான்-கத்ரீனா கைஃப்
சல்மான்கான்-கத்ரீனா கைஃப்

ஆரம்பத்தில் சல்மான்கான் குடும்பம் இத்திருமணத்தில் பங்கேற்கும் என்று செய்திகள் வெளியானது. இது குறித்து சல்மான்கான் சகோதரி அர்பிதா அளித்துள்ள பேட்டியில்,`` திருமணத்திற்கு தங்களது குடும்பத்திற்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. எனக்கோ அல்லது எனது சகோதரி அல்விரா குடும்பத்திற்கோ அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. திருமணத்தில் கலந்து கொள்வோம் என்று வெளியாகும் செய்திகளை நம்பவேண்டாம்" என்று தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சல்மான் கான் தந்தை சலீம் கானும் தங்களுக்கு திருமண அழைப்பிதழ் வரவில்லை என்று தெரிவித்திருந்தார். இம்மாதம் 7-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை கத்ரீனா கைஃப் திருமண நிகழ்ச்சிகள் ராஜஸ்தானில் நடக்கிறது. கத்ரீனா கைஃப் சில காலம் சல்மான்கானை காதலித்ததாக செய்திகள் வந்ததுண்டு. தற்போது கூட சல்மான்கானுடன் டைகர் 3 படத்தில் நடித்து வருகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz