Published:Updated:

`இதுதான் எனது முதல் பிச்சை' - தெருக்களில் பிச்சை எடுப்பதை வீடியோவாகப் பதிவிட்ட நடிகை!

நுபுர் அலங்கர்

தெருக்களில் பிச்சை எடுக்கும் புகைப்படத்தையும் வீடியோவையும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

`இதுதான் எனது முதல் பிச்சை' - தெருக்களில் பிச்சை எடுப்பதை வீடியோவாகப் பதிவிட்ட நடிகை!

தெருக்களில் பிச்சை எடுக்கும் புகைப்படத்தையும் வீடியோவையும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

Published:Updated:
நுபுர் அலங்கர்
இந்தித் திரையுலகில் பிரபலமான நடிகை நுபுர் அலங்கர். சோனாலி கேபிள், ராஜா ஜி, சாவரியா, உட்பட பல படங்களில் நடித்த இவர் கர் கி லக்ஷ்மி பெட்டியான், தியா அவுர் பாத்தி ஹம், சக்திமான் போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

சுமார் 27 வருடங்களாக நடித்துவரும் இவருடைய கணவர் அலங்கர் ஸ்ரீவத்சவாவும் நடிகர். 49 வயதான நடிகை நுபுர் கடந்த பிப்ரவரி மாதம் சினிமாவில் இருந்து விலகி சந்நியாசி ஆகிவிட்டதாகத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, ``புனித யாத்திரைகளுக்குச் செல்வதில் தீவிரமாக இருக்கிறேன். எனக்கு ஆன்மிக நாட்டம் முன்பே இருந்தது. இருப்பினும் இப்போதுதான் அதற்காக என்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன். இனி என் வாழ்க்கையில் சினிமா இல்லை. நடித்துக்கொண்டிருந்தபோது, புகழ், வெற்றி பற்றிக் கவலைப்பட்டேன். சினிமாவை விட்டு விலகியதும் நிம்மதியாக இருக்கிறேன்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நுபுர் தனது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்களைப் பகிர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் தான் பிச்சை எடுக்கும் வீடியோவையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பிச்சை எடுக்கிறார். தான் ஒருநாளைக்கு 11 பேரிடம் பிச்சை எடுக்க வேண்டும் என்றும், இதுதான் எனது முதல் பிச்சை என்றும் கூறுகிறார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, ``கடந்த சில காலங்களாகவே என்னுடைய குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட்டுவந்தன. இதனால் என் குருவைச் சந்தித்தேன். அவரின் ஆலோசனைப் படி சந்நியாசத்தை நான் மேற்கொண்டேன். பிச்சை எடுப்பதால் கொஞ்சம் பணம் கிடைக்கிறது. இப்பணம் வாழ்க்கையை ஓட்ட உதவுகிறது என்று அவர் கூறியிருக்கிறார். இவர் பிச்சை எடுக்கும் புகைப்படமும், வீடியோவும் இணையத்தில் தற்போது வைரலாகிவருகின்றன.