Published:Updated:

கணவரின் வாழ்த்து மழையில் பிரியங்கா சோப்ரா! வைரலாகும் பிறந்தநாள் புகைப்படங்கள்

பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸ்

பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோன்ஸ் இன்ஸ்டாகிராமில் வாழ்த்துப் பதிவையும், தனது மனைவியுடன் எடுத்த சில அழகான புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார்.

கணவரின் வாழ்த்து மழையில் பிரியங்கா சோப்ரா! வைரலாகும் பிறந்தநாள் புகைப்படங்கள்

பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோன்ஸ் இன்ஸ்டாகிராமில் வாழ்த்துப் பதிவையும், தனது மனைவியுடன் எடுத்த சில அழகான புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார்.

Published:Updated:
பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸ்
பிரியங்கா சோப்ரா, இந்தியத் திரை உலகில் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்.

இவர் நேற்று தனது 40 ஆவது பிறந்த நாளை தன் கணவர் நிக் ஜோன்ஸ் மற்றும் அவரின் நண்பர்களுடன் கொண்டாடினார். அமெரிக்க பாடகரான நிக் ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவின் 40 ஆவது பிறந்த நாளை கடற்கரையில் கொண்டாடியுள்ளார். இதையொட்டி இன்ஸ்டாகிராமில் வாழ்த்துப் பதிவையும் , தனது மனைவியுடன் எடுத்த சில அழகான புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார் நிக். அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஹேப்பி பர்த்டே 80-ஸ் பேபி!" என்ற வாசகங்கள் அடங்கிய கார்டை பிரியங்கா வைத்திருப்பது, 'பிரியங்கா தி ஜூவல் ஆஃப் ஜூலை எஸ்ட். 1982' என்று எழுதக்கூடிய பலகையை நிக் வைத்திருப்பது,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இருவரும் வானவேடிக்கையை பார்த்துக்கொண்டிருப்பது போன்ற புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பின் இன்ஸ்டாகிராமில் இருவரும் இருக்கும் புகைப்படத்துடன் தனது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து 'இந்த வாழ்க்கைப் பயணத்தில் உன்னுடன் சேர்ந்து பயணிப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்' என்றும் 'லவ் ஆஃப் மை லைஃப்' என்றும் பதிவிட்டிருக்கிறார். பிரியங்காவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.சோனம் கபூர் மற்றும் கரீனா கபூர் கான் அனுஷ்கா சர்மா கத்ரீனா கைஃப் மற்றும் , பிரியங்காவின் தொழில்துறை நண்பர்கள் என அனைவரும் இன்ஸ்டாகிராமில் பிறந்தநாள் வாழ்த்துகளை பதிவிட்டிருக்கின்றனர்.