Published:Updated:

`அவருக்கு 10 காதலர்கள் உள்ளனர்' குற்றம் சாட்டிய ஷெர்லின் சோப்ரா - நடிகை ராக்கி சாவந்த் புகார்

ஷெர்லின் சோப்ரா,ராக்கி சாவந்த்

ராக்கி சாவந்த், நடிகை ஷெர்லின் சோப்ரா மீது மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

`அவருக்கு 10 காதலர்கள் உள்ளனர்' குற்றம் சாட்டிய ஷெர்லின் சோப்ரா - நடிகை ராக்கி சாவந்த் புகார்

ராக்கி சாவந்த், நடிகை ஷெர்லின் சோப்ரா மீது மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

Published:Updated:
ஷெர்லின் சோப்ரா,ராக்கி சாவந்த்

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். பல இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் ராக்கி சாவந்த் தமிழில் ‘என் சகியே’, ‘முத்திரை’ போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார். 

தற்போது ராக்கி சாவந்த், நடிகை ஷெர்லின் சோப்ரா மீது மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். நடிகை ராக்கி சாவந்துக்கு 10 காதலர்கள் உள்ளனர் என வீடியோ வெளியிட்டதற்காக நடிகை ஷெர்லின் சோப்ரா மீது அவர் புகார் அளித்துள்ளார்.  

இது குறித்து அவர் பேசும்போது, இன்ஸ்டாகிராமில் நடிகை ஷெர்லின் சோப்ரா கடந்த 6ம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ராக்கி சாவந்த், ஷெர்லின் சோப்ரா
ராக்கி சாவந்த், ஷெர்லின் சோப்ரா

அந்த வீடியோவில், ` ராக்கி சாவந்த்துக்கு 10 காதலர்கள் உள்ளனர்' என்று அவர் பேசியிருக்கிறார். சோப்ராவின் இதுபோன்ற பேச்சுகளால் தனது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய காதலர் என்னைப் பார்த்து  ஷெர்லின் சோப்ரா கூறியதில் ஏதும் உண்மை இருக்கிறதா? உண்மையில், எனக்கு 10 ஆண் நண்பர்கள் உள்ளனரா? என என்னிடம் கேட்கிறார் என்று வருத்தத்துடன் பேசியிருக்கிறார். 

சமீபத்தில் ஷெர்லின் சோப்ரா, நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் மற்றும் தயாரிப்பாளரான சஜித் கான் மீது பாலியல் குற்றச்சாட்டுகளைக்  கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அப்போது அவர்களுக்கு ஆதரவாக ராக்கி சாவந்த் பேசியிருக்கிறார். இந்த நிலையில், ராக்கி மற்றும் சோப்ரா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஒருவர் மீது ஒருவர் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துக் கொண்டுள்ளனர்.