Published:Updated:

`கண்மூடித்தனமாக காதலிக்கும்போது...' ஏமாற்றிய கணவர்; டாட்டூவை அழித்த பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்!

கணவருடன் ராக்கி, இருப்பில் வரைந்திருக்கும் டாட்டூ

தனது முன்னாள் கணவரின் டாட்டூவை நடிகை ராக்கி சாவந்த் அகற்றி இருக்கிறார்.

Published:Updated:

`கண்மூடித்தனமாக காதலிக்கும்போது...' ஏமாற்றிய கணவர்; டாட்டூவை அழித்த பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்!

தனது முன்னாள் கணவரின் டாட்டூவை நடிகை ராக்கி சாவந்த் அகற்றி இருக்கிறார்.

கணவருடன் ராக்கி, இருப்பில் வரைந்திருக்கும் டாட்டூ

பாலிவுட்டில் பாடல்களுக்கு நடனமாடுவதில் பிரபலமாக விளங்கும் நடிகை ராக்கி சாவந்த். பிக்பாஸ் 15-வது சீசனில் கலந்துகொண்டபோது தன் கணவர் என்று கூறி ரிதேஷ் என்பவரை அறிமுகப்படுத்தினார். ரிதேஷ் பிக்பாஸ் சீசன் 14ல் கலந்து கொண்டவர். 15-வது சீசனிலும் வந்தவர் தங்களது திருமணத்தை உறுதி செய்தார். ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் தன் கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக ராக்கி சாவந்த் தெரிவித்தார். ரிதேஷை நான் மிகவும் விரும்புவதாகவும், ஆனால் அவர் தனது உடமைகளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகுதான் ரித்தேஷிற்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது தெரியவந்தது. இதனால் எனது இதயமே வெடித்து விடுவது போன்று இருந்தது. அவர் முதல் மனைவியிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெறாமல் இருந்ததால் என்னுடன் வாழ்வதில் சட்டச்சிக்கல் இருப்பதாக என்னிடம் ரிதேஷ் தெரிவித்தார்.

டாட்டூவை அகற்றும் ராக்கி சாவந்த்
டாட்டூவை அகற்றும் ராக்கி சாவந்த்

அதனால் என் கணவரை நானும் பிரிந்துவிட்டேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ராக்கி சாவந்த் தன் கணவருக்காக தனது உடம்பில் டாட்டூ (பச்சை குத்துதல்) வரைந்திந்திருந்தார். அதாவது இருப்பில் ரிதேஷ் என்று எழுதி இருந்தார். அதனை ராக்கி சாவந்த் தற்போது தனது உடம்பில் இருந்து அகற்றி இருக்கிறார். இதற்காக டாட்டூ வரையும் ஸ்டூடியோவிற்கு சென்று கணவரின் பெயரை அடியோடு அகற்றி இருக்கிறார். பெயரை அகற்றும் வீடியோவையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இறுதியாக ரிதேஷ் பெயரை நீக்குவதற்காக இங்கு வந்திருக்கிறேன் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். டாட்டூவை நீக்கிய பிறகு வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், "ரிதேஷ், எனது வாழ்க்கையில் இருந்தும், உடம்பில் இருந்தும் நிரந்தரமாக சென்றுவிட்டாய். கண்மூடித்தனமாக காதலிக்கும்போது யாரும் தங்களது உடம்பில் டாட்டூ வரைந்து கொள்ளக்கூடாது. அவற்றை அகற்றுவது மிகவும் கடினமாக இருந்தது" என்று தெரிவித்துள்ளனர். அவருக்கு சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.