Published:Updated:

”காதலன் என்னைச் சந்திக்க வராததால்தான் இதைச் செய்தேன்!" - நடிகை ராக்கி சாவந்த் விளக்கம்

விமான நிலையத்தில் ராக்கி சாவந்த்

தனது பெயரில் துபாயில் அடில் கான் வீடு வாங்கியிருப்பதாகவும், தனக்கு பி.எம்.டபிள்.யூ கார் வாங்கிக் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்திருந்த ராக்கி சாவந்த், அடிக்கடி தன் காதலனுடன் ஜிம், விமானநிலையம், பார்ட்டிகளில் காணப்பட்டார்.

”காதலன் என்னைச் சந்திக்க வராததால்தான் இதைச் செய்தேன்!" - நடிகை ராக்கி சாவந்த் விளக்கம்

தனது பெயரில் துபாயில் அடில் கான் வீடு வாங்கியிருப்பதாகவும், தனக்கு பி.எம்.டபிள்.யூ கார் வாங்கிக் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்திருந்த ராக்கி சாவந்த், அடிக்கடி தன் காதலனுடன் ஜிம், விமானநிலையம், பார்ட்டிகளில் காணப்பட்டார்.

Published:Updated:
விமான நிலையத்தில் ராக்கி சாவந்த்
சர்ச்சைகளுக்குப் பெயர்போன இந்திப் பட நடிகை ராக்கி சாவந்த் கடந்த சில மாதங்களாக டெல்லியைச் சேர்ந்த அடில் கான் என்பவரைக் காதலித்து வருகிறார். தன் காதலனைக் காண நேற்று ராக்கி சாவந்த் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

ஆனால் அங்கு காதலனைச் சந்தித்துப் பேச முடியவில்லை என்று ராக்கி சாவந்த் குறைபட்டுக்கொண்டார். டெல்லியில் இருந்து விமானத்தில் இன்று மும்பை வந்த ராக்கி சாவந்த் மும்பை விமானநிலையத்தில் தலைவிரிகோலமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். ”என் காதலனைச் சந்திப்பதற்காக டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றேன். ஆனால் அடில் கான் என்னைச் சந்திக்க வரவே இல்லை. இந்த முடியைக்கூட காதலனுக்காகத்தான் இதுபோன்று மாற்றினேன்” என்று கூறி, முடிக்கு கலர் அடித்திருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

காதலன் அடிலுடன் ராக்கி சாவந்த்
காதலன் அடிலுடன் ராக்கி சாவந்த்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

”நான் டெல்லிக்கு நேற்று சென்றேன். காதலனும் நானும் சேர்ந்துதான் மும்பைக்கு வருவதாக இருந்தது. ஆனால் டெல்லியில் காதலன் அடில் கான் என்னை வந்து சந்திக்கவே இல்லை. இனி அவனுக்கு போன் பண்ண மாட்டேன். எனக்கும் சுயமரியாதை இருக்கிறது. விமானத்தில் வரும் போது இரண்டு மணி நேரம் அழுதுகொண்டிருந்தேன். இப்போது நான் மிகவும் வருத்தத்தில் இருக்கிறேன்” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 15வது சீசனில் ராக்கி சாவந்த் கலந்துகொண்ட போது ரிதேஷ் என்பவரைக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தி அவரைக் காதலிப்பதாகத் தெரிவித்தார். அவர்கள் இருவரும் திருமணமும் செய்துகொண்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால் சில மாதங்களில் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். அதே போன்று அடில் கானும் சென்றுவிட்டாரா என்று ராக்கி சாவந்த் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ராக்கி சாவந்த் விமானநிலையத்தில் அளித்த பேட்டியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியிருக்கிறது. தனது பெயரில் துபாயில் அடில் கான் வீடு வாங்கியிருப்பதாகவும், தனக்கு பி.எம்.டபிள்.யூ கார் வாங்கிக் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்திருந்த ராக்கி சாவந்த், அடிக்கடி தன் காதலனுடன் ஜிம், விமானநிலையம், பார்ட்டிகளில் காணப்பட்டார். ஆனால் அதற்குள் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டுவிட்டது.