Published:Updated:

``என்னிடம் தவறாக நடந்து கொண்டார்"- `பிக் பாஸ்' சஜித் கான் மீது குவியும் குற்றச்சாட்டு

ஷீலா பிரியா சேத், சஜித் கான்

பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தரக்குறைவாக பேசியதாகவும், அருவறுக்கத்தக்க கேள்விகளை தன்னிடம் கேட்டதாகவும் நடிகை ஷீலா பிரியா சேத் குற்றம் சாட்டியிருக்கிறார்.

``என்னிடம் தவறாக நடந்து கொண்டார்"- `பிக் பாஸ்' சஜித் கான் மீது குவியும் குற்றச்சாட்டு

பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தரக்குறைவாக பேசியதாகவும், அருவறுக்கத்தக்க கேள்விகளை தன்னிடம் கேட்டதாகவும் நடிகை ஷீலா பிரியா சேத் குற்றம் சாட்டியிருக்கிறார்.

Published:Updated:
ஷீலா பிரியா சேத், சஜித் கான்

பிரபல பாலிவுட் ஹீரோ  சல்மான்கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 16-ல் கலந்துகொணட சஜித் கான் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. 

#Mee too இயக்கத்தின் போது பல பெண்கள் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேற்றப்பட வேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனைதொடர்ந்து ‘Mee too’ இயக்கத்தில் புகார் அளித்த பெண்களில் ஒருவரான நடிகை  ஷெர்லின் சோப்ராவும், சஜித் கானை பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியேற்றும்படி வலியுறுத்தி இருந்தார்.  

சஜித் கான்,ஷீலா பிரியா சேத்,
சஜித் கான்,ஷீலா பிரியா சேத்,

பலரும் இவர் மீது குற்றம்சாட்டி வந்தநிலையில் தற்போது சஜித் கானால் தானும் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பாலிவுட் நடிகை ஷீலா பிரியா சேத் தெரிவித்துள்ளார். சஜித் கான் 14 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்,  தரக்குறைவாக பேசியதாகவும், அருவருக்கத்தக்க கேள்விகளை தன்னிடம் கேட்டதாகவும் நடிகை ஷீலா பிரியா சேத் குற்றம் சாட்டியிருக்கிறார்.


இது குறித்து பேசிய அவர், "2008ஆம் ஆண்டில்தான் இயக்குநர் சஜித் கானை முதல்முறையாக சந்தித்தபோது அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். அவரது வரவிருக்கும் படங்களில் ஒன்றில் தன்னை நடிக்க வைக்குமாறு அவரிடம் கேட்டபோது, ​​​​படத் தயாரிப்பாளர் ஐந்து நிமிடங்கள் என்னை ஆட்சேபிக்கும் வகையில் பார்த்துக் கொண்டிருந்ததார். மார்பக அறுவை சிகிச்சை செய்துகொள் அப்போதுதான்  உனக்கு பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்கும்' என  என்னிடம் பேசினார்" என்று சஜித் கான் மீது ஷீலா பிரியா சேத் குற்றம் சாட்டியிருக்கிறார்.