Published:Updated:

15 வயது குறைவானவர்; காதல் முறிந்தது,நட்புடன் பழகுவோம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சுஷ்மிதா சென்

சுஷ்மிதா - ரோஹ்மன்
News
சுஷ்மிதா - ரோஹ்மன்

நடிகை சுஷ்மிதா சென் தனது 3 ஆண்டு கால காதலை முறித்துக்கொண்டுள்ளார்.

முன்னாள் உலக அழகியும் நடிகையுமான சுஷ்மிதா சென் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். ஆனால் இரண்டு பெண் குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். சுஷ்மிதாசென் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து ரோஹ்மன் என்பவரைக் காதலித்து வந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. இருவரும் ஒரே வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தனர். ஆனால் சமீப காலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சுஷ்மிதா சென் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். தனது காதலனுடனான உறவு முறிந்துவிட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார். நீண்ட நாள் உறவு முடிந்துவிட்டது என்றும், நண்பர்களாக தொடங்கினோம், நண்பர்களாகவே இருப்போம், அன்பு தொடரும் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மகிழ்ச்சியான நேரத்தில் சுஷ்மிதா ரோஹ்மன்
மகிழ்ச்சியான நேரத்தில் சுஷ்மிதா ரோஹ்மன்

ரோஹ்மன் ஒரு மாடல். பல ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார். சுஷ்மிதாவும் ரோஹ்மனும் சமூக வலைதளம் மூலம்தான் அறிமுகமானார்கள். இருவரும் நட்பாக பேச ஆரம்பித்தபோது ரோஹ்மன் தனது வயதை மறைத்துவிட்டார். இருவருக்கும் இடையே 15 வயது வித்தியாசம் இருக்கிறது. இதைக் குறிப்பிட்டு பலரும் அவரை விமர்சித்தனர். ஆனால், இருவரும் காதலர்களாக வாழ்ந்து வந்தனர். அனைத்து நிகழ்ச்சிகளிலும் இரண்டு பேரும் சேர்ந்தே கலந்து கொண்டனர். ஆனால் மூன்று ஆண்டு காதல் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. 45 வயதாகும் சுஷ்மிதா சென் ஆரம்பத்தில் தன்னை விட வயது அதிகமான தயாரிப்பாளர் விக்ரம்பட் என்பவரை காதலித்தார். விக்ரம் பட் ஏற்கனவே திருமணமானவர். விக்ரம் பட் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டதால் அவரைப் பிரிந்த பிறகு நடிகர் ரன்தீப் ஹோடா என்பவரை சுஷ்மிதா காதலித்தார். அவர்கள் மும்பையில் ஹோட்டல் சென்றாலும், பார்ட்டிக்கு சென்றாலும் சேர்ந்தே சென்றனர். ஆனால் அந்த காதலும் கைகூடவில்லை. 2013ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமை சுஷ்மிதா காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்தி வெளியானது. ஆனால் அதனை சுஷ்மிதா மறுத்திருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz