2018ம் ஆண்டு நடிகைகள் முக்கிய பிரபலங்கள் metoo மூலம் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இதில் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தாவும் ஒருவர். அவர் நடிகர் நானா படேகர் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டினார்.

தற்போது தனுஸ்ரீ தத்தா மீண்டும் புதிய குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருக்கிறார். அவருக்கு நடந்த கார் விபத்து, கார் பழுதானதற்கெல்லாம் யாரோ ஒருவர்தான் காரணம் என்று குற்றம் சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் அழுத்தத்தில் இருக்கிறேன். அதற்காக நான் தற்கொலை செய்து கொள்ளமாட்டேன். நான் குறிவைத்து மிகவும் மோசமாக துன்புறுத்தப்படுகிறேன். தயவுசெய்து யாராவது உதவி செய்யுங்கள்.

கடந்த ஆண்டு எனக்கு கிடைக்க இருந்த பட வாய்ப்பு பறிக்கப்பட்டது. அதன் பிறகு எனது வேலைக்காரி நான் குடிக்கும் தண்ணீரில் ஏதோ ரசாயானத்தை கலந்ததால் எனது உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. எனது வாகனத்தில் இரண்டு முறை பழுதை ஏற்படுத்தி விபத்தை ஏற்படுத்தினர். நான் உயிரிழப்பதில் இருந்து தப்பித்து மும்பை வந்தேன். இப்போது எனது வீட்டிற்கு வெளியில் அருவருப்பான சம்பவங்கள் நடக்கின்றன. இதற்காக நான் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன். எங்கேயும் போகவும் மாட்டேன்.
இங்கேயே இருந்து எனது நடிப்பில் கவனம் செலுத்துவேன். பாலிவுட் மாபியாக்களும், அரசியல்வாதிகளும், சமூக விரோத கிரிமினல்களும் சேர்ந்து கொண்டு என்னை துன்புறுத்துகின்றனர். இவை அனைத்திற்கும் மீ டூ வில் நான் குற்றம்சாட்டியவர்கள்தான் காரணமாகும். அநீதிக்கு எதிரான நின்றதற்காக துன்புறுத்தப்படுவது இது எந்த மாதிரியான இடம்?. மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரவேண்டும். இங்கே அனைத்து விஷயங்களும் கையைவிட்டு போகின்றன. இதனால் என்னைப்போன்றவர்கள் கஷ்டப்படுகிறார்கள். இன்று எனக்கு நடப்பது நாளை உங்களுக்கு நடக்கலாம் என்று தெரிவித்தார்.