Published:Updated:

ரூ.12 கோடி மதிப்புள்ள வீடு; சொத்துத் தகராறில் நடிகையை அடித்துக் கொன்றாரா மகன்?

வீணா கபூர்

சொத்துக்காக பிரபல நடிகையை, அவரின் மகனே அடித்து கொலை செய்தார் எனக் கிளம்பிய செய்தி பாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ரூ.12 கோடி மதிப்புள்ள வீடு; சொத்துத் தகராறில் நடிகையை அடித்துக் கொன்றாரா மகன்?

சொத்துக்காக பிரபல நடிகையை, அவரின் மகனே அடித்து கொலை செய்தார் எனக் கிளம்பிய செய்தி பாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Published:Updated:
வீணா கபூர்

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகை  வீணா கபூர். 74 வயதுடைய வீணா கபூர் ஏராளமான  டிவி சீரியல்களிலும் பாலிவுட்  படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மும்பையில்  வசித்து வரும் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அமெரிக்காவில் மென் பொறியாளராக உள்ளார். 43 வயதான இளைய மகன் சச்சின் வீணா கபூருடன் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில்  அமெரிக்காவில் வசிக்கும் அவரின் மூத்த மகன் கடந்த செவ்வாய்கிழமை அன்று வீணா கபூருக்கு பலமுறை போன் செய்திருக்கிறார். ஆனால் யாருமே போனை எடுக்கவில்லை. இதனையடுத்து  உறவினருக்கு போன் செய்த அவர், உடனே வீட்டிற்கு சென்ற பார்க்கும்படி கூறியிருக்கிறார். உறவினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அங்கு வீணா கபூர் இல்லை. இதனைத் தொடர்ந்து  அவர்கள்  போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர் என்பதாக செய்திகள் வெளியாகின.

வீணா கபூர்
வீணா கபூர்

மும்பையில் வசித்து வரும் வீணா கபூரின் இளைய மகன் சச்சினிடம் அவரின் தாய் குறித்து போலீசார் விசாரித்தாகவும், விசாரணையின்போது , தனது தாயைக் கொடூரமாகக் கொலை செய்ததை சச்சின் ஒப்புக்கொண்டார் என செய்திகள் வெளியாகின.

பிரபல நடிகையான வீணா கபூர் தனது மகனால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என செய்திகள் வெளியானதில் பாலிவுட் வட்டாரங்கள் அதிர்ச்சியாகின. இந்நிலையில், வீணா கபூர்; தான் இறக்கவில்லை எனவும் அந்த செய்தி பொய் எனவும் தகவல் தெரிவித்திருக்கிறார்.

வீணா கபூர்
வீணா கபூர்

நான் நலமாக உள்ளேன் என்னை யாரும் கொலை செய்யவில்லை. என் மகன் என்னை அன்பாக பார்த்துக்கொள்கிறார். சமூக வலைதளங்களில் வெளியான செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.