Published:Updated:

The Kerala Story: `சமூக வலைதளங்களில் வெளியான நடிகையின் மொபைல் நம்பர்!' மன உளைச்சலுக்கு ஆளான நடிகை

'தி கேரளா ஸ்டோரி' | ஆதா ஷர்மா

'The Kerala Story' படத்தில் நடித்த நடிகை ஆதா ஷர்மாவின் போன் நம்பர் சமூக வலைதளங்களில் கசிந்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Published:Updated:

The Kerala Story: `சமூக வலைதளங்களில் வெளியான நடிகையின் மொபைல் நம்பர்!' மன உளைச்சலுக்கு ஆளான நடிகை

'The Kerala Story' படத்தில் நடித்த நடிகை ஆதா ஷர்மாவின் போன் நம்பர் சமூக வலைதளங்களில் கசிந்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

'தி கேரளா ஸ்டோரி' | ஆதா ஷர்மா
'தி கேரளா ஸ்டோரி' படத்தின் டீசர் வெளியானது முதல் இப்படம் பொய்யான பரப்புரைகளால் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது என நாடுமுழுவதும் விமர்சனங்கள் எழுந்திருந்தன.

இது நாடுமுழுவதும் பெரும் பேசுபொருளாக பலரும் இப்படத்திற்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். கிட்டத்தட்ட ஒரு மாதமாக விவாதிக்கப்பட்டு வந்த இந்த சர்ச்சைகள் இப்போதுதான் கொஞ்சம் தளர்ந்தது.

'தி கேரளா ஸ்டோரி' | ஆதா ஷர்மா
'தி கேரளா ஸ்டோரி' | ஆதா ஷர்மா

இந்நிலையில் இப்படத்தில் நடித்த நடிகை ஆதா ஷர்மாவின் போன் நம்பர் சமூக வலைதளங்களில் கசிந்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் சிலர் ஆதா ஷர்மாற்கு போன் செய்து அவரை ஆபாசமாகப் பேசித் தொந்தரவு செய்வதாக நடிகை ஆதா ஷர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள நடிகை ஆதா ஷர்மா, "தன்னுடைய போன் நம்பர், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் கசிந்தால் ஒரு பெண் எப்படி மன உளைச்சலுக்கு ஆளாவாளோ அப்படித்தான் எனக்கும் இருந்தது.

'தி கேரளா ஸ்டோரி' | ஆதா ஷர்மா
'தி கேரளா ஸ்டோரி' | ஆதா ஷர்மா

இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களால் சந்தோஷம் அடைபவர்களின் மனம் எவ்வளவு வக்கிரமானது! 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் இதுபோன்று ஒரு பெண்ணின் போன் நம்பரை பகிரங்கமாக வெளியிடுவதன் மூலம் அப்பெண் கொடுமைப்படுத்தப்படும் காட்சியை இந்தச் சம்பவம் எனக்கு நினைவூட்டுகிறது" என்று கூறியுள்ளார்.