Published:Updated:

"ஆதிபுருஷ் பட VFX காட்சிகளின் தரம் மேம்படுத்தப்படும்!"- ரிலீஸ் தேதியைத் தள்ளிவைத்த படக்குழு

ஆதிபுருஷ், பிரபாஸ் - சைஃப் அலி கான்

"'ஆதிபுருஷ்' சாதாரண திரைப்படம் அல்ல. இது நமது கலாசாரம் மற்றும் வரலாறு ஆகிவற்றை அடையாளப்படுத்தும் பணி. இதைச் சாத்தியமாக்குவதற்கு எங்களுக்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது!" - இயக்குநர் ஓம் ராவத்

"ஆதிபுருஷ் பட VFX காட்சிகளின் தரம் மேம்படுத்தப்படும்!"- ரிலீஸ் தேதியைத் தள்ளிவைத்த படக்குழு

"'ஆதிபுருஷ்' சாதாரண திரைப்படம் அல்ல. இது நமது கலாசாரம் மற்றும் வரலாறு ஆகிவற்றை அடையாளப்படுத்தும் பணி. இதைச் சாத்தியமாக்குவதற்கு எங்களுக்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது!" - இயக்குநர் ஓம் ராவத்

Published:Updated:
ஆதிபுருஷ், பிரபாஸ் - சைஃப் அலி கான்
பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் பான் இந்தியா நடிகராக வலம் வர ஆரம்பித்துள்ளார். தற்போது அவர் ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிற `ஆதி புருஷ் (Adipurush)' படத்தில் ராமர் வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸ் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிவரும் இப்படத்தை இயக்குநர் ஓம் ராவத் (Om Raut) இயக்கி வருகிறார்.

இந்நிலையில், அண்மையில் வெளியான இப்படத்தின் டீசரில் VFX காட்சிகளின் தரம் சரியாக இல்லை என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்துப் படக்குழுவினர் இதற்குப் பல விளக்கங்கள் அளித்திருந்தனர். மேலும், செல்போனில் பார்த்தால் சரியாகத் தெரியாது என்று கூறி திரையரங்கிலும் டீசரை வெளியிட்டிருந்தனர். ஆனால், மீண்டும் அதே விமர்சனங்களே தொடர்ந்தன.

ஆதிபுருஷ்
ஆதிபுருஷ்

இந்தக் குறைகளை மேம்படுத்தும் விதமாக படக்குழுவினர் VFX பணிகளில் தீவீரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இதனால் இப்பணிகளை செய்வதற்கு இன்னும் கூடுதல் அவகாசம் தேவைப்படும் என்று படக்குழு கூறியுள்ளது. இதனால், அடுத்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த பட வெளியீட்டுத் தேதி தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஓம் ராவத் தின் பதிவு
இயக்குநர் ஓம் ராவத் தின் பதிவு

இது பற்றி இயக்குநர் ஓம் ராவத், "'அதிபுருஷ்' சாதாரண திரைப்படம் அல்ல, பிரபு ஸ்ரீ ராமர் மீதான பக்தி, நமது கலாசாரம் மற்றும் வரலாறு ஆகிவற்றை அடையாளப்படுத்தும் பணி. அந்த வகையில் இத்திரைப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒரு நல்ல முழுமையான காட்சி அனுபவத்தைத் தர வேண்டும். இதைச் சாத்தியமாக்குவதற்கு எங்களுக்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. எனவே 'அதிபுருஷ்' திரைப்படத்தை அடுத்த ஆண்டு 2023, ஜூன் 16ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். இந்தியா பெருமைப்படும் வகையில் இத்திரைப்படத்தை உருவாக்குவோம். உங்கள் அன்பும் ஆதரவும் எப்போதும் எங்களுக்கு வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.