Published:Updated:

`குட்டி சிங்கம்' - அம்மாவாகப் போகும் ஆலியா பட்; நவம்பரில் பிரசவம், குவியும் வாழ்த்துகள்!

ரன்பீர் கபூர் - ஆலியா பட்

ஆலியா - ரன்பீருக்கு ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிகின்றன. பாலிவுட்டின் கியூட் தம்பதிகள் தங்கள் குழந்தையை வரவேற்கத் தயாராகி வருகிறார்கள்.

`குட்டி சிங்கம்' - அம்மாவாகப் போகும் ஆலியா பட்; நவம்பரில் பிரசவம், குவியும் வாழ்த்துகள்!

ஆலியா - ரன்பீருக்கு ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிகின்றன. பாலிவுட்டின் கியூட் தம்பதிகள் தங்கள் குழந்தையை வரவேற்கத் தயாராகி வருகிறார்கள்.

Published:Updated:
ரன்பீர் கபூர் - ஆலியா பட்
ஆலியா பட் - ரன்பீர் கபூர் திருமணம் ஏப்ரல் 14-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. திருமணக் கொண்டாட்டம் முடிந்த வேளையில் தங்கள் பணிகளில் இருவரும் பிஸியாக தொடங்கிவிட்டனர். `பிரம்மஸ்திரா' படத்தின் டிரெய்லர், புரொமோஷன் என இவர்களின் ஷெட்டியூல் முழுமையாக நிரம்பி இருந்தது. ஆலியா தனது முதல் ஹாலிவுட் படத்திற்கான படப்பிடிப்புக்கு லண்டன் சென்றார். இப்போது அடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ் ஒன்றை அவர் அறிவித்திருக்கிறார்.

ஆலியா பட் அம்மாவாக இருக்கிறார் என்பதுதான் அந்த அறிவிப்பு. இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த ஆலியா, "எங்கள் குழந்தை... விரைவில்" என்கிற கேப்ஷனோடு ரன்பீர் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார். அதில் இருவரும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் திரையில் தங்கள் குழந்தையைப் பார்த்து கொண்டிருக்கின்றனர். அதே பதிவில் ஒரு சிங்க குடும்பத்தின் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார் ஆலியா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தப் பதிவிற்கு பாலிவுட் தொடங்கி ஹாலிவுட் நட்சத்திரங்கள் வரை வாழ்த்து மழையைப் பொழிந்து வருகிறார்கள். ஆலியா நடித்து கொண்டிருக்கும் ஹாலிவுட் படமான `Heart of Stone'-இல் உடன் நடிக்கும் கல் கடோட், ஹார்ட் எமோஜிகளை வாரி வழங்கியுள்ளார். பிரியங்கா சோப்ரா, "வாழ்த்துகள் ஹனி. யாய்! காத்திருக்க முடியவில்லை" என தனது சந்தோஷத்தைப் பகிர்ந்திருக்கிறார். கரண் ஜோஹர், "இதயமே வெடிக்கிறது" என கமெண்ட் செய்துள்ளார்.

ஆலியா பட் - ரன்பீர் கபூர்
ஆலியா பட் - ரன்பீர் கபூர்

ஆலியா பட்டிற்கு வரும் நவம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆலியா பட்டும், ரன்பீர் கபூரும் இணைந்து நடித்துள்ள 'பிரம்மாஸ்திரா' படம் செப்டம்பர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை இரண்டு பேருமே மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். காரணம், கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் ஆலியா பட், ரன்பீர் கபூர் இருவருமே முதலீடு செய்துள்ளனர்.

ஆலியா - ரன்பீருக்கு ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிகின்றன. பாலிவுட்டின் கியூட் தம்பதிகள் தங்கள் குழந்தையை வரவேற்கத் தயாராகி வருகிறார்கள். வாழ்த்துகள் இருவருக்கும்!