Published:Updated:

"ரன்பீர் கபூரின் முன்னாள் காதலிகள் இன்றும் என்னுடைய தோழிகள்!" - மனம் திறந்து பேசிய ஆலியா பட்

ஆலியா பட்

'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் ஆலியா பட் தன்னுடைய கணவர் ரன்பீர் கபூரின் முன்னாள் காதலிகள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

"ரன்பீர் கபூரின் முன்னாள் காதலிகள் இன்றும் என்னுடைய தோழிகள்!" - மனம் திறந்து பேசிய ஆலியா பட்

'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் ஆலியா பட் தன்னுடைய கணவர் ரன்பீர் கபூரின் முன்னாள் காதலிகள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

Published:Updated:
ஆலியா பட்

பாலிவுட்டில் கரண் ஜோஹரின் பிரபலமான டாக் ஷோதான் 'காஃபி வித் கரண்'. ஆறு சீசன்களாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிறகு, சமீபத்தில் இந்த நிகழ்ச்சி திரும்ப வராது என்று அவர் கிட்டத்தட்ட அனைவரையும் நம்ப வைத்தார். ஆனால் "ஒவ்வொரு சிறந்த கதைக்கும் ஒரு நல்ல திருப்பம் தேவை" என்று பின்னர் சூசகமாகக் கூறியிருந்தார்.

கரண் ஜோகர்
கரண் ஜோகர்

அதே சமயம், இந்த நிகழ்ச்சி திரும்பத் தொலைக்காட்சியில் வராது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆனால், ட்விஸ்டாக, இதனை அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஒரு புதிய அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். அதில் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியின் புதிய சீசன் புதிய வடிவத்தில் Disney+ Hotstar-ல் இனி வெளியாகும் என்று கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் தற்பொழுது காஃபி வித் கரண் சீசன் 7-ன் முதல் எபிசோடு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஆலியா பட்டும், நடிகரும் தீபிகா படுகோனின் கணவருமான ரன்வீர் சிங்கும் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். எபிசோடின் ரேபிட் ஃபயர் ரவுண்டில் பல கேள்விகள் கேட்கப்பட்ட பிறகு ஆலியா பட்டிடம் அவருடைய கணவர் ரன்பீர் கபூரின் முன்னாள் காதலிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வெளிப்படையாக ஆலியா பதிலளித்தார்.

ஆலியா பட், தீபிகா படுகோன் மற்றும் கத்ரீனா கைஃப்
ஆலியா பட், தீபிகா படுகோன் மற்றும் கத்ரீனா கைஃப்

"எனது கணவரின் முன்னாள் காதலிகளுடன் எப்படி நட்புடன் இருப்பது என்று எனக்குத் தெரியும். அவர்கள் இருவரும் இன்றும் எனக்கு நல்ல நண்பர்கள். எனக்கு இருவரையும் பிடிக்கும்" என்று பேசியிருந்தார்.

அவர்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை என்றாலும் அது தீபிகா படுகோன் மற்றும் கத்ரீனா கைஃப் என்பது அனைவரும் அறிந்ததே. ஆலியா பதிலளித்த இந்த வீடியோ க்ளிப், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் அவர், தனது நிச்சயதார்த்த வைர மோதிரத்தைக் காட்டி, அதில் உள்ள ரகசிய வேலைப்பாடு குறித்துப் பேசியுள்ளார். "எனது வைர மோதிரம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான எங்கள் உறவுக்கான தத்துவத்துடன் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு எழுத்துகளும் ஒவ்வொன்றைக் குறிக்கின்றன. ஆனால் அது என்னென்ன என்பதை நான் யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டேன்" என்று பேசியுள்ளார்.