Published:Updated:

Alia Bhatt: “ நான் RRR போட்டோக்களை நீக்கியது உண்மைதான்!ஏனென்றால்….” உண்மையை உடைத்த ஆலியா பட்.

ஆலியா பட்

RRR படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நான் அத்திரைப்படம் குறித்தான பதிவுகளை நீக்கிவிட்டேன் என்று பரவி வரும் செய்தியை நான் அறிந்தேன். உண்மையை அறியாமல் ஏதோவொரு அனுமானத்தில் இதுபோன்ற செய்திகள் செய்திகளைப் பரப்பவேண்டாம்

Alia Bhatt: “ நான் RRR போட்டோக்களை நீக்கியது உண்மைதான்!ஏனென்றால்….” உண்மையை உடைத்த ஆலியா பட்.

RRR படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நான் அத்திரைப்படம் குறித்தான பதிவுகளை நீக்கிவிட்டேன் என்று பரவி வரும் செய்தியை நான் அறிந்தேன். உண்மையை அறியாமல் ஏதோவொரு அனுமானத்தில் இதுபோன்ற செய்திகள் செய்திகளைப் பரப்பவேண்டாம்

Published:Updated:
ஆலியா பட்

ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான 'RRR' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அதில் தனக்கு போதிய காட்சிகள் அளிக்கப்படவில்லை என நடிகை ஆலியா பட் அப்செட்டாக இருப்பதாக வதந்திகள் வெளியாகின. மேலும் இயக்குநர் ராஜமௌலியை அவர் unfollow செய்துவிட்டார் என்றும் RRR திரைப்படம் குறித்தான பதிவுகளைத் தன் இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ஆலியாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “ஆலியா ராஜமௌலி மீது மிகுந்த மரியாதையை வைத்திருக்கிறார். படக்குழுவுடனும் சக நடிகர்களுடனும் படப்பிடிப்பின்போது நெருங்கிய நட்பில் இருந்தார். ஆலியா எந்தப் படத்திலும் படப்பிடிப்புக்குப் பிறகு தலையிடுவதில்லை, இயக்குநர்களின் முடிவுகளுக்கு மதிப்பளிப்பார்” என்று கூறியிருந்தார்.

Alia Bhatt
Alia Bhatt

இந்நிலையில் இச்சர்ச்சை குறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார் ஆலியா பட். தன் இன்ஸ்டா பக்கத்தில் அவர் தெரிவித்ததாவது “ RRR படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நான் அத்திரைப்படம் குறித்தான பதிவுகளை நீக்கிவிட்டேன் என்று பரவி வரும் செய்தியை நான் அறிந்தேன். உண்மையை அறியாமல் ஏதோவொரு அனுமானத்தில் இதுபோன்ற செய்திகள் செய்திகளை பரப்பவேண்டாம் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன். என் இன்ஸ்டா பக்கம் அதிக பதிவுகளை கொண்டிருப்பதால் பழைய வீடியோ பதிவுகளை நான் மாற்றி அமைப்பது எப்போதுமான வழக்கம்.

ராஜமௌலி இயக்கத்தில் RRR திரைப்படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நான் மிகவும் நன்றி கடன் பட்டுளேன். மேலும் சரண் , தரக் ஆகியோருடன் நடித்ததற்காகவும் நன்றி கூறுகிறேன்.

Alia Bhatt
Alia Bhatt

ராஜமௌலி மற்றும் அவரது குழுவினரின் அதீத உழைப்பினால் உருவான திரைப்படம் RRR. எனவே அது குறித்து எந்த வதந்தியும் பரவவேண்டாம் என்பதற்காகவே இந்த பதிவு” இவ்வாறு தெரிவித்துள்ளார் அலியா பட்.