Published:Updated:

"எங்கள் வாழ்வின் மிகச்சிறந்த செய்தி!"- பெண் குழந்தைக்குப் பெற்றோர்களான ரன்பீர் கபூர், ஆலியா பட்

ஆலியா பட் - ரன்பீர் கபூர்

பிரபல பாலிவுட் நடிகர்கள் ரன்பீர் கபூர் - ஆலியா பட் தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

"எங்கள் வாழ்வின் மிகச்சிறந்த செய்தி!"- பெண் குழந்தைக்குப் பெற்றோர்களான ரன்பீர் கபூர், ஆலியா பட்

பிரபல பாலிவுட் நடிகர்கள் ரன்பீர் கபூர் - ஆலியா பட் தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

Published:Updated:
ஆலியா பட் - ரன்பீர் கபூர்

பிரபல பாலிவுட் ஜோடிகளான ஆலியா பட்டும் ரன்பீர் கபூரும் காதலித்து வந்த நிலையில் அவர்களது திருமணம் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. திருமணக் கொண்டாட்டம் முடிந்த வேளையில் `பிரம்மாஸ்திரா' படத்தின் டிரெய்லர், புரொமோஷன் எனத் தங்கள் பணிகளில் இருவரும் பிஸியாகத் தொடங்கிவிட்டனர். அச்சமயத்தில் ஆலியா பட் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அப்பதிவில் "எங்கள் குழந்தை... விரைவில்" என்கிற கேப்ஷனோடு ரன்பீர் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து தான் கர்ப்பமாகிய விஷயத்தை அறிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை ஆலியா பட்டிற்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகின. 

இன்று காலையில் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் தம்பதி தங்களது உறவினர்களுடன் தென் மும்பையில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவனைக்குச் சென்றனர். அவர்கள் ஆலியா பட்டின் பிரசவத்திற்காக என இன்று காலையிலேயே அங்குச் சென்றுவிட்டனர். ஆலியா பட் தந்தை மகேஷ் மற்றும் ரன்வீர் கபூர் தாயார் நீது கபூரும் மருத்துவமனைக்கு வந்தனர். இன்று பிற்பகல் 12.05 மணிக்கு ஆலியா பட்டிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

ஆலியா பட், ரன்பீர் கபூர்
ஆலியா பட், ரன்பீர் கபூர்

இதனிடையே ஆலியா பட் குழந்தை பிறப்பு குறித்து அவரது இன்ஸ்டாகிராமில், "எங்கள் வாழ்க்கையின் மிகச் சிறந்த செய்தி. இதோ எங்கள் குழந்தை வந்துவிட்டது. ஒரு அற்புதமான பெண் குழந்தை அவள்! நாங்கள் அன்பு மிகுந்த பெற்றோர்களாகிவிட்டோம் என்பதை அதிகாரபூர்வமாக தெரிவித்துக்கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து நடிகர் ரன்பீர் கபூர் - நடிகை ஆலியா பட் தம்பதிக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.