Published:Updated:

`அம்மா, எனக்காக இதைச் செய்யுங்கள்’ - தனது முதல் படம் குறித்து மனம் திறந்த ஆலியா பட்!

ஆலியா பட்

அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட பேசிய ஆலியா பட் தனது முதல் பட அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார்.

`அம்மா, எனக்காக இதைச் செய்யுங்கள்’ - தனது முதல் படம் குறித்து மனம் திறந்த ஆலியா பட்!

அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட பேசிய ஆலியா பட் தனது முதல் பட அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார்.

Published:Updated:
ஆலியா பட்
நீண்ட நாட்களாக காதலித்து வந்த காதல் ஜோடிகளான நடிகர் ரன்பீர் கபூர்- ஆலியா பட் இருவரும் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் தங்கள் குழந்தைக்காக காத்திருக்கின்றனர்.

ஆலியா பட் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் பட் மற்றும் நடிகை சோனி ரஸ்தானின் மகள். 2012ம் ஆண்டு தன் 19 வயதில் கதாநாயகியாக `Student of the Year' என்ற படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் சாதாரண சம்பளத்தில் நடிக்கத் தொடங்கிய ஆலியா பட், இன்று பாலிவுட்டில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நட்சத்திர நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட பேசிய ஆலியா பட் தனது முதல் படத்தின் சம்பளம் பற்றியும் அதன் அனுபவம் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

ஆலியா பட், ரன்பீர் கபூர்
ஆலியா பட், ரன்பீர் கபூர்

இது பற்றி பேசிய அவர், "எனது முதல் படமான 'Student of the Year' படத்திற்காக நான் வாங்கிய சம்பளம் ரூ.15 லட்சம். அதிலிருந்து எந்த பணத்தையும் செலவழிக்காமல் அந்த காசோலையை அப்படியே எனது அம்மாவிடம் கொண்டுபோய் கொடுத்தேன். ‘அம்மா, எனக்காக நீங்கள் இதைச் செய்யுங்கள். நீங்கள் எனது பணத்தைக் கையாளுங்கள்’ என்று நெகிழ்ச்சியுடன் சொன்னேன். அன்றிலிருந்து இன்றுவரை என் பணத்தை என் அம்மாதான் கையாளுகிறார்" என்று கூறினார்.