Published:Updated:

"இது என்னுடைய திரை வாழ்க்கையில் என்ன மாற்றத்தை எற்படுத்தும்..."- மனம் திறந்த அலியா பட்

அலியா பட்,ரன்பீர் கபூர்

எதிர்காலத்தில் எனது பயணம் எப்படி செல்ல போகிறது என்பதைக் காண உற்சாகத்தோடு காத்திருக்கிறேன் - அலியா பட்

"இது என்னுடைய திரை வாழ்க்கையில் என்ன மாற்றத்தை எற்படுத்தும்..."- மனம் திறந்த அலியா பட்

எதிர்காலத்தில் எனது பயணம் எப்படி செல்ல போகிறது என்பதைக் காண உற்சாகத்தோடு காத்திருக்கிறேன் - அலியா பட்

Published:Updated:
அலியா பட்,ரன்பீர் கபூர்
பிரபல பாலிவுட் ஜோடிகளான அலியா பட்டும் ரன்பீர் கபூரும் காதலித்து வந்த நிலையில் அவர்களது திருமணம் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

திருமணக் கொண்டாட்டங்கள்  முடிந்தப் பிறகு இருவரும் தங்களது படப் பணிகளைத் தொடங்கிவிட்டனர். அதன்பின் தான் கர்ப்பமாகிய விஷயத்தை அறிவித்திருந்த அலியா பட்டிற்கு நவம்பர் 6ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.  ரன்பீர் கபூர்  குடும்ப வழக்கப்படி 'R' என தொடங்கும் எழுத்தில் பெயர் வைக்க விரும்பி 'ராஹா' என அக்குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளனர். இதனிடையே அலியா பட், குழந்தை ராஹா பிறந்த பிறகு தனது வாழ்க்கை எவ்வாறு மாறியுள்ளது என்பது குறித்து  நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.  

ஆலியா பட்,ரன்பீர் கபூர்
ஆலியா பட்,ரன்பீர் கபூர்

இது தொடர்பாக பேசிய அலியா பட், ``குழந்தை பிறந்த பிறகு எங்களின் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தாய்மை உணர்வு என்னை மாற்றிவிட்டது. குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகிறது. நான் எப்படி என்னுடைய படக் கதாபத்திரங்களைத் தேர்வு செய்யப் போகிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை. இன்னும் நான் அதைப் பற்றி சிந்திக்கவே இல்லை. ஆனால் நான் எல்லாவற்றையும் எதிர்நோக்கும் விதம் மாறிவிட்டது. முன்பைவிட நான் இப்போது மனம் திறந்துள்ளேன். இது என்னுடைய திரை வாழ்கையில் எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் எனது பயணம் எப்படி செல்ல போகிறது என்பதைக் காண  உற்சாகத்தோடு காத்திருக்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.