Published:Updated:

`பிரம்மாஸ்திரா' ட்ரெய்லர்; ஹாலிவுட் பட சூட்டிங்; ஆலியா ஹாப்பி அண்ணாச்சி!

ஆலியா பட்

பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படத்தின் ட்ரெய்லருக்கு கிடைத்து வரும் வரவேற்பில் ஆலியாவுக்கு ஏக சந்தோஷம். ஆலியா, ஹாலிவுட்டில் படத்திலும் நடித்து வருகிறார்.

`பிரம்மாஸ்திரா' ட்ரெய்லர்; ஹாலிவுட் பட சூட்டிங்; ஆலியா ஹாப்பி அண்ணாச்சி!

பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படத்தின் ட்ரெய்லருக்கு கிடைத்து வரும் வரவேற்பில் ஆலியாவுக்கு ஏக சந்தோஷம். ஆலியா, ஹாலிவுட்டில் படத்திலும் நடித்து வருகிறார்.

Published:Updated:
ஆலியா பட்

ஆலியா பட்- ரன்பீர் கபூர் இணைந்து நடித்த 'பிரம்மாஸ்திரா' படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜுனா, மௌனி ராய் உள்ளிட்டோர் நடிக்க பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படத்தின் ட்ரெய்லருக்கு கிடைத்து வரும் வரவேற்பில் ஆலியாவுக்கு ஏக சந்தோஷம். ட்ரெய்லர் வெளியானபோது அதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஆலியா, 'எங்கள் இதயத்தின் ஒரு பகுதி' என்கிற கேப்ஷனோடு அதனைப் பதிவிட்டார்.

ஆலியா பட்
ஆலியா பட்

ட்ரெய்லர் வெளியான பிறகு இங்கிருந்து இலண்டன் பறந்திருக்கிறார் ஆலியா. நெட்ஃபிளிக்ஸின் `Heart of Stone' என்கிற ஹாலிவுட் படத்தில் கல் கடோட், ஜேமி டோர்னன் ஆகியோரோடு நடித்து வருகிறார். படப்பிடிப்புக்குப் பிறகு சோர்ந்த முகத்தோடு இன்ஸ்டா ஸ்டோரி பகிர்ந்த ஆலியா அதில், "மற்றுமொரு சிறப்பான நாள் `Heart of Stone' (படப்பிடிப்பில்) - மிகுந்த சோர்வு - ஆனால் அதைவிட மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரம்மாஸ்திராவுக்கு நீங்கள் தரும் அன்பை பார்க்கும் போது... இந்த வலிகள் சோர்வு எல்லாம் காணாமல் போய்விடும். உங்களுக்கு என் அன்பு" என்று பதிவிட்டு இருக்கிறார்.

மூன்று பாகங்களாகத் திட்டமிடப்பட்டிருக்கும் பிரம்மாஸ்திரா படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 9 திரையரங்குகளில் வெளியாகிறது. ஆலியா, தனது ஹாலிவுட் டெபியூட் படத்திற்கு பிறகு `Rocky Aur Rani Ki Prem Kahani' மற்றும் `Darlings' ஆகிய படங்களில் நடிக்கவிருக்கிறார். ஏப்ரலில் ஆலியா- ரன்பீர் கபூர் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அதன் பிறகு தனது கரியரில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார் ஆலியா.