பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பாலிவுட் திரையுலகில் சூப்பர்ஸ்டார். அவரின் தந்தை 'ஹரிவன்ஷ் ராய் பச்சன்' பிரபல ஹிந்தி மொழிக் கவிஞராவார். இவர் பச்சன் என்ற புனைப் பெயரில் கவிதை எழுதி பிரபலமானதால் அவரது பெயருக்குப் பின்னால் அதை சேர்த்துக்கொண்டார். அதன் பின் 'பச்சன்' என்பது அவர்களின் குடும்பப் பெயர் ஆகிவிட்டது. அமிதாப் பச்சன் போலவே அவரது மகன் அபிஷேக் பச்சன் பாலிவுட் சினிமாவில் பல ஹிட் படங்களைத் தந்தவர். இதுபோல் அமிதாப் பச்சன் குடும்பத்தில் அனைவருமே சினிமா உலகில் பிரபலமாக விளங்கியவர்கள்.
அதை தொடர்ந்து அமிதாப் பச்சனின் மகள் வழி பேரன் 'அகஸ்டிய நந்தா(Agastya nanda)' தற்போது The Archies எனும் படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் அமிதாப் பச்சன் தனது பேரனை வாழ்த்தி 'நம் கொடியை பறக்க விட வேண்டும்' என்று கூறியுள்ளார்.
"உன் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. அதைவிட ஒரு பெரிய மகிழ்ச்சி நம் அனைவருக்கும் இருக்க முடியாது. என் ஆசிகள் மற்றும் வாழ்த்துக்கள் எப்பொழுதும் உனக்கு இருக்கும் என் அன்பே. நன்றாக செய்யுங்கள், கொடியை பறக்க விட வேண்டும்."என்று கூறியுள்ளார்.