Published:Updated:

பிறந்தநாளன்று பான் மசாலா விளம்பரத்திலிருந்து வெளியேறிய அமிதாப் பச்சன்... ரசிகர்கள் வரவேற்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கமலா பசந்த் விளம்பரத்தில் அமிதாப்பச்சன்
கமலா பசந்த் விளம்பரத்தில் அமிதாப்பச்சன்

நடிகர் அமிதாப் பச்சன் பான்மசாலா விளம்பரத்திலிருந்து வெளியேறினார். அதோடு அதில் நடிப்பதற்காக வாங்கிய பணத்தையும் திரும்பக் கொடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நடிகர் அமிதாப் பச்சன் தனது 79வது பிறந்தநாளை இன்று வெகுவிமரிசையாகக் கொண்டாடினார். தனது புதிய படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட் பண்ணை வீட்டில் சினிமா நண்பர்களுடன் தனது பிறந்தநாளை அவர் கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட செல்வதை அமிதாப்பச்சன் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

அதேபோல், இந்தப் பிறந்தநாளில் சமுதாயத்திற்கு நல்ல காரியம் ஒன்றை செய்ய வேண்டும் என்று கருதி தான் நடித்து வந்த பான் மசாலா விளம்பரம் ஒன்றிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார்.
பிறந்தநாளுக்கு புறப்பட்ட அமிதாப்பச்சன்
பிறந்தநாளுக்கு புறப்பட்ட அமிதாப்பச்சன்

அமிதாப்பச்சனுக்கு 79 வயதாகிவிட்ட போதிலும் எப்போதும் தன்னை துடிப்புடனும், இளமையுடனும் வைத்துக்கொள்வது வழக்கம். அதனால்தான் இன்னும் ஏராளமான விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

திடீர் நோய்த்தொற்று... மருத்துவமனையில் சிகிச்சை... பிக் பாஸ் நமீதாவுக்கு என்ன பிரச்னை?

கமலா பசந்த் என்ற பான்மசாலா விளம்பரத்திலும் நடித்து வந்தார். இந்த விளம்பரம் இளைஞர்களை புகையிலைப்பழக்கத்திற்கு அடிமையாக்குவது போல் இருக்கிறது என்றும், எனவே அந்த விளம்பரத்தில் இருந்து விலக வேண்டும் என்றும் தேசிய புகையிலை எதிர்ப்பு அமைப்பு ஒன்று நடிகர் அமிதாப் பச்சனிடம் கேட்டுக்கொண்டது. சமூக வலைதளத்திலும் இது தொடர்பாக சிலர் அமிதாப் பச்சனிடம் கேள்வி எழுப்பி இருந்தனர். இதையடுத்து அமிதாப் பச்சன் கமலா பசந்த் பான் மசாலா விளம்பரத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். அக்கம்பெனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் ரத்து செய்ததோடு, அந்த பான் மசாலாவை விளம்பரப்படுத்த வாங்கிய பணத்தையும் திரும்பக் கொடுத்துவிட்டதாக அமிதாப் பச்சன் தனது பிறந்தநாளில் குறிப்பிட்டுள்ளார்.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

இது குறித்து அமிதாப் பச்சன் அலுவலகத்தில் இருந்தும் முறைப்படி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அமிதாப் பச்சனின் இந்தச் செயலை பலரும் பாராட்டி இருக்கின்றனர். இளைஞர்களின் நலனைக் கருத்தில்கொண்டு வாங்கிய பணத்தைக்கூட திரும்ப கொடுத்து விளம்பரத்தில் இருந்து வெளியேறி இருப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று என்று புகையிலை எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமிதாப் பச்சன் தற்போது 6 படங்களில் நடித்து வருகிறார். அதோடு 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு