Published:Updated:

கடுமையான போக்குவரத்து நெரிசல்; ஷூட்டிங்கிற்கு பைக்கில் லிப்ட் கேட்டுச் சென்ற அமிதாப் பச்சன்!

லிஃப்ட் கேட்டு செல்லும் அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன் படப்பிடிப்பு தளத்திற்கு செல்ல பைக்கில் லிப்ட் கேட்டுச் சென்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published:Updated:

கடுமையான போக்குவரத்து நெரிசல்; ஷூட்டிங்கிற்கு பைக்கில் லிப்ட் கேட்டுச் சென்ற அமிதாப் பச்சன்!

அமிதாப் பச்சன் படப்பிடிப்பு தளத்திற்கு செல்ல பைக்கில் லிப்ட் கேட்டுச் சென்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

லிஃப்ட் கேட்டு செல்லும் அமிதாப் பச்சன்
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்  பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'ப்ராஜெக்ட் கே' படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படம் வரும் அடுத்த வருடம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனிடையே தாஸ் குப்தா இயக்கத்தில் 'செக்‌ஷன் 84' படத்திலும் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. 

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திற்குச் செல்லும்போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால்  நடிகர் அமிதாப் பச்சன் பைக்கில் சென்ற ஒரு நபரிடம்  லிப்ட் கேட்டுச் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றுள்ளார். இதுதொடர்பான  புகைப்படத்தைப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து லிப்ட் கொடுத்த நபருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டிருந்த அந்தப்  பதிவில், “  நீங்கள் யார் என்று தெரியாது. ஆனால் என்னை  படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்திற்கு அழைத்துச் சென்றீர்கள். தீர்க்க முடியாத போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உதவிய தொப்பி, ஷார்ட்ஸ் மற்றும் மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்திருந்த  உரிமையாளருக்கு நன்றி” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பதிவும், புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.