Published:Updated:

"`Boycott Bollywood' என்று மக்கள் திசை திருப்பப்படுகிறார்கள்!" - இயக்குநர் அனுராக் காஷ்யப் காட்டம்

அனுராக் காஷ்யப்

பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், தென்னிந்தியத் திரைப்படங்கள் குறித்தும் மத்திய அரசின் 'ஜி.எஸ்.டி' வரி குறித்தும் பேசியுள்ளார்.

"`Boycott Bollywood' என்று மக்கள் திசை திருப்பப்படுகிறார்கள்!" - இயக்குநர் அனுராக் காஷ்யப் காட்டம்

பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், தென்னிந்தியத் திரைப்படங்கள் குறித்தும் மத்திய அரசின் 'ஜி.எஸ்.டி' வரி குறித்தும் பேசியுள்ளார்.

Published:Updated:
அனுராக் காஷ்யப்

பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப், தற்போது 'Dobaara' எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை டாப்ஸி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டிப் பேசிய இயக்குநர் அனுராக் காஷ்யப், தென்னிந்தியத் திரைப்படங்கள் குறித்தும் மத்திய அரசின் 'ஜி.எஸ்.டி' வரி குறித்தும் பேசியுள்ளார்.

அப்போது, "பாலிவுட் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறைவாக உள்ளது. தென்னிந்தியத் திரைப்படங்களை ஒப்பிடும்போது பாலிவுட் திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. இதற்குக் காரணம் என்ன?" என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அனுராக், "இங்கு யாருக்கும் எந்தக் குறையும் இல்லை. தென்னிந்தியத் திரைப்படங்கள் வெற்றி பெறுகின்றன என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? கன்னடம் மற்றும் தமிழில் ஒரு படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் இந்தி மற்றும் தெலுங்கில் இரண்டு படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. கடந்த சில வாரங்களாகத் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் வெளியான படங்கள் பற்றி நீங்கள் பேச மாட்டீர்கள். காரணம் அங்குப் படங்கள் ஏதும் பெரிதாக ஓடவில்லை.

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்

அதுமட்டுமல்லாமல், உணவுக்கு ஜி.எஸ்.டி, பனீருக்கு ஜி.எஸ்.டி என இங்கு நிறைய பிரச்னைகள் உள்ளன. உண்மையில் மக்களிடம் பணம் இல்லை, அதுதான் இங்கு முக்கியப் பிரச்னை. இதற்கிடையே பாலிவுட்டைப் புறக்கணிக்க வேண்டும், இதைப் புறக்கணிக்க வேண்டும், அதைப் புறக்கணிக்க வேண்டும் என்று மக்கள் திசை திருப்பப்படுகிறார்கள். படம் நன்றாக இருக்கும் என்று நம்பினால் மக்கள் அப்படத்திற்காகத் தங்கள் பணத்தைச் செலவு செய்து அவர்கள் விரும்பும் படத்தைப் பார்ப்பார்கள். எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ள 'RRR', 'KGF' போன்ற படங்களை மக்கள் காத்திருந்து பார்க்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.