Published:Updated:

`விக்ரம் கண்டுகொள்ளவில்லை' பேட்டியளித்த இயக்குநர் அனுராக்; `நடந்தது இதுதான்' பதிலளித்த விக்ரம்!

விக்ரம், அனுராக்

இயக்குநர் அனுராக் காஷ்யப், `கென்னடி' படத்தின் கதை நடிகர் விக்ரமை நினைத்து எழுதியதாகவும், ஆனால் விக்ரமை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பேசியிருக்கிறார்.

Published:Updated:

`விக்ரம் கண்டுகொள்ளவில்லை' பேட்டியளித்த இயக்குநர் அனுராக்; `நடந்தது இதுதான்' பதிலளித்த விக்ரம்!

இயக்குநர் அனுராக் காஷ்யப், `கென்னடி' படத்தின் கதை நடிகர் விக்ரமை நினைத்து எழுதியதாகவும், ஆனால் விக்ரமை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பேசியிருக்கிறார்.

விக்ரம், அனுராக்
அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ராகுல் பட், சன்னி லியோன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கென்னடி'.

இப்படம் அண்மையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதையடுத்து இப்படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் அனுராக் காஷ்யப், இப்படத்தை நடிகர் விக்ரமை நினைத்து எழுதியதாகக் கூறியுள்ளார்.

கென்னடி
கென்னடி

இதுபற்றி பேசியுள்ள அனுராக், "ஒரு குறிப்பிட்ட நடிகரை மனதில் வைத்துத்தான் இந்தப் படத்தை நான் எழுதினேன். அதனால்தான் படத்திற்கும் 'கென்னடி' என்று பெயர் வைத்திருக்கிறேன். ஏனென்றால் அந்த நடிகரின் செல்லப்பெயர் 'கென்னடி'. 'கென்னடி' என்பது வேறுயாருமில்ல்லை சியான் விக்ரமின் செல்லப்பெயர்தான் அது. இப்படத்தில் நடிப்பதற்காக நான் விக்ரமை தொடர்பு கொண்டன்.

ஆனால், அவர் எந்தவித பதிலும் சொல்லவில்லை. அதன்பிறகு நடிகர் ராகுலை தொடர்பு கொண்டு பேசினேன். அவர், இப்படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார். அவரது பதில் எனக்கு உற்சாகமாக இருந்தது. ராகுல் அற்பணிப்புடன் சுமார் எட்டு மாதங்கள் இப்படத்திற்காகவே ஒதுக்கி நடித்துக் கொடுத்தார்" என்று கூறியுள்ளார்.

இதற்கு விளக்கமளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விக்ரம், "சமூக ஊடகங்களில் இருக்கும் எனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் கூறியதன்படி ஒரு வருடத்திற்கு முன் நடந்த நம் உரையாடலை மீண்டும் நினைவு கூர்ந்து பார்த்தேன். அதில், இந்தப் படத்துக்காக நீங்கள் என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்தீர்கள் என்றும், நான் உங்களுக்குப் பதிலளிக்கவில்லை என்றும் நீங்கள் வருத்தப்பட்டதை வேறொரு நடிகர் மூலம் கேள்விப்பட்டேன்.

விக்ரம், அனுராக்
விக்ரம், அனுராக்

பின்னர், நானே உடனடியாக உங்களை அழைத்து, உங்களிடமிருந்து எந்த மெயில் அல்லது மெசேஜும் வரவில்லை என்று விளக்கினேன். நீங்கள் என்னை தொடர்பு கொண்ட ஐடி இப்போது செயலில் இல்லை, 2 ஆண்டுகளுக்கு முன்பு எனது எண் மாறிவிட்டது. அன்று உங்களிடம் சொன்னதை இப்போதும் சொல்ல விரும்புகிறேன். அன்று அந்த தொலைபேசி அழைப்பின் போது நான் கூறியது போல், உங்கள் கென்னடி படத்தைக் காண நான் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் அத்திரைப்படம் என் பெயரில் இருப்பதால் இன்னும் ஆர்வத்துடன் படத்தைக் காணக் காத்திருக்கிறேன்" என்று விளக்கமளித்துள்ளார்.