70 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பூமா நிறுவனம் விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள், ஆடைகள் உள்ளிட்டவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு பூமா ஆடை அணிந்திருந்த புகைப்படம் ஒன்றை பாலிவுட் நடிகையும் , விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை பூமா (இந்தியா) நிறுவனம் அனுஷ்கா சர்மாவின் அனுமதியின்றி தங்கள் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
இதனிடையே, தனது அனுமதியின்றி புகைப்படங்களை விளம்பரத்துக்காக பயன்படுத்திய பூமா (இந்தியா) நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில், " என் புகைப்படத்தை விளம்பரத்துக்காக பயன்படுத்துவதற்கு முன் நீங்கள் என்னிடம் அனுமதி பெற வேண்டும் என்று உங்களுக்கு தெரியும். நான் உங்களின் Brand Ambassadaor இல்லை. தயவு செய்து அதை நீக்குங்கள்" என்று பதிவிட்டு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.