Published:Updated:

“மக்களை அச்சுறுத்துவதற்குப் பதிலாக நடிப்பில் கவனம் செலுத்துங்கள்” - பா.ஜ.க -வின் நரோத்தம் மிஸ்ரா

அர்ஜுன் கபூர், நரோத்தம் மிஸ்ரா

பாய்காட் பிரசாரத்துக்கு எதிராக பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் குரல் கொடுத்ததை அடுத்து நரோத்தம் மிஸ்ரா அவரைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

“மக்களை அச்சுறுத்துவதற்குப் பதிலாக நடிப்பில் கவனம் செலுத்துங்கள்” - பா.ஜ.க -வின் நரோத்தம் மிஸ்ரா

பாய்காட் பிரசாரத்துக்கு எதிராக பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் குரல் கொடுத்ததை அடுத்து நரோத்தம் மிஸ்ரா அவரைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

Published:Updated:
அர்ஜுன் கபூர், நரோத்தம் மிஸ்ரா
அமீர்கானின் ’லால் சிங் சத்தா’ மற்றும் அக்‌ஷய் குமாரின் ’ரக்‌ஷா பந்தன்’ உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வி அடைந்த நிலையில் இதற்குக் காரணம் 'பாய்காட் லால் சிங் சத்தா', ‘பாய்காட் ரக்‌ஷா பந்தன்’ என்ற சமூக வலைதள பிரசாரம் எனக் கூறப்பட்டது.

இந்த பாய்காட் பிரசாரத்துக்கு எதிராக பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் கோபமாகத் தன் கருத்துகளை முன்வைத்திருந்தார். இதனால் #ArjunKapoor மற்றும் #BoycottbollywoodForever உள்ளிட்ட ஹாஷ்டேக்குகளை பாலிவுட் ரசிகர்கள் டிரெண்ட் செய்துவந்தனர்.

அர்ஜுன் கபூர்
அர்ஜுன் கபூர்

உண்மையில் இதுபோன்ற புறக்கணிப்புக் கலாசாரம் நியாயமற்றது. அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என அர்ஜுன் கபூர் பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து பாய்காட் பாலிவுட் போன்ற ஹாஷ்டேக்குகள் ரசிகர்களால் உருவாக்கப்படவில்லை என்றும், அதன் பின்னணியில் ஒரு உள்நோக்கம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, மக்களை அச்சுறுத்துவதற்குப் பதிலாக உங்கள் நடிப்பில் கவனம் செலுத்துங்கள் என்று அர்ஜுன் கபூரைச் சாடியுள்ளார். மேலும், தங்கள் படங்களில் இந்து மதத்தைக் குறிவைக்கும் நடிகர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் பொதுமக்களை அச்சுறுத்த முயலக்கூடாது" என்று நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளார்.