Published:Updated:

தாஜ்மஹாலைப் பார்க்கும் ரன்பீர் கபூர்; அலியா பட்டைச் சீண்டிய அர்ஜுன் கபூர்!

அர்ஜுன் கபூர் | ஆல்யா பட்

அலியா பட் - ரன்பீர் கபூர் இருவரும் 2014 ஆம் ஆண்டு டூ ஸ்டேட்ஸ் படத்தில் ஒன்றாக நடித்தனர். இருவருக்கும் இடையிலான கெமிஸ்டரி பரவலாகப் பேசப்பட்டது.

தாஜ்மஹாலைப் பார்க்கும் ரன்பீர் கபூர்; அலியா பட்டைச் சீண்டிய அர்ஜுன் கபூர்!

அலியா பட் - ரன்பீர் கபூர் இருவரும் 2014 ஆம் ஆண்டு டூ ஸ்டேட்ஸ் படத்தில் ஒன்றாக நடித்தனர். இருவருக்கும் இடையிலான கெமிஸ்டரி பரவலாகப் பேசப்பட்டது.

Published:Updated:
அர்ஜுன் கபூர் | ஆல்யா பட்

அர்ஜுன் கபூர், ஷ்ரத்தா கபூர், ரன்பீர் கபூர், கார்த்திக் ஆர்யன் ஆகியோர் பிப்ரவரி 20-ல் டெல்லி ஆக்ராவில் நடைபெற்ற பிலிம் மேக்கர் லவ் ரஞ்சன்- அலிஷா திருமணத்திற்கு சென்றிருந்தனர். அர்ஜுன் கபூர், தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அங்கு எடுத்த புகைப்படங்களைத் தற்போது பகிர்ந்துள்ளார். ஏற்கெனவே இது போலான பதிவொன்றில் தாஜ்மஹால் முன்பு அர்ஜுன் கபூரும் ரன்பீரும் நிற்கும் படத்தைப் பகிர்ந்து 'அலியா பட்டுடன் செல்வதற்கு பதிலாக என்னுடன் ரன்பீர், தாஜ்மஹாலை முதன்முறையாக பார்க்கிறார்' என அலியாவை டேக் செய்திருந்தார்.

தாஜ்மஹாலைப் பார்க்கும் ரன்பீர் கபூர்
தாஜ்மஹாலைப் பார்க்கும் ரன்பீர் கபூர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்போது லவ் ரஞ்சன் - அலிஷா இணையர்களின் புகைப்படம், அர்ஜுனும் ரன்பீரும், ரஞ்சன் உடன் இருக்கும் புகைப்படம் உள்ளிட்டவற்றோடு ரன்பீர் கபூர் பால்கனியில் அமர்ந்து தாஜ் மஹாலைப் பார்க்கும் படத்தையும் பகிர்ந்து அதில் அலியா பட்டை டேக் செய்துள்ளார். 'நீண்ட நாட்கள் தம்பதி இணைந்து வாழ வேண்டும்' என்கிற வாழ்த்தோடு 'ஆக்ராவில் எங்கள் நேரத்தை நினைவுகூர சிலவற்றைப் பகிர்கிறேன்' எனவும் அதில் கேப்ஷன் பதிவிட்டு இருக்கிறார். ஆல்யா பட் - ரன்பீர் கபூர் இருவரும் 2014 ஆம் ஆண்டு டூ ஸ்டேட்ஸ் படத்தில் ஒன்றாக நடித்தனர். இருவருக்கும் இடையிலான கெமிஸ்டரி பரவலாக பேசப்பட்டது. அதன் பிறகு எந்தப் படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை எனினும் நண்பர்களாக இருந்தனர். 2018 முதல் இருவரும் டேட்டில் உள்ளனர். அதனாலே அர்ஜுன் கபூர் ரன்பீரின் புகைப்படங்களை வைத்து அலியாவை விளையாட்டாக சீண்டினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism