Election bannerElection banner
Published:Updated:

விசாரணைக்கு ஆப்சென்ட்... கங்கனா ரணாவத்துக்கு வாரண்ட் பிறப்பித்த அந்தேரி நீதிமன்றம்!

கங்கனா
கங்கனா

நடிகை கங்கனா ரணாவத்திற்கு அந்தேரி நீதிமன்றம் ஜாமீனில் வரக்கூடிய வாரண்ட் பிறப்பித்துள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டபோது நடிகை கங்கனா ரணாவத் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்தி படப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தரை சுஷாந்தின் தற்கொலையுடன் தொடர்புப்படுத்திப் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் கங்கனா ரணாவத் பேசியிருப்பதாகக் கூறி ஜாவேத் அக்தர் அந்தேரி நீதிமன்றத்தில் கிரிமினல் புகார் ஒன்றைத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் இப்புகார் குறித்து விசாரிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது.

போலீசார் விசாரணை நடத்தி கடந்த மாதம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் கங்கனா மார்ச் 1-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டுமென உத்தரவிடப்பட்டது.

கங்கனா
கங்கனா

ஜாமீனுடன் கூடிய வாரண்ட்

ஆனால் உத்தரவிட்டபடி இன்று கங்கனா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து கங்கனாவிற்கு ஜாமீனில் வெளி வரக்கூடிய வகையில் வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த கட்ட விசாரணை வரும் 22-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் கங்கனா ஏற்கனவே சர்ச்சைக்குரிய கருத்துக்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார். இதற்காக கங்கனாவிற்கு ட்விட்டர் நிர்வாகம் எச்சரிக்கை செய்து இருந்தது. அப்படி இருந்தும் விடாமல் ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். கங்கனா ரணாவத்திற்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கங்கனா நடித்துள்ள 'தலைவி' படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது என்று அவரே சில நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையில் 'தலைவி' படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு