Published:Updated:

Katrina kaif : தன் அம்மாவின் ஆசை; மும்பையிலிருந்து மதுரை வந்த கத்ரீனா கைஃப்; பின்னணி இதுதான்!

கத்ரீனா கைஃப் தன் அம்மாவுடன்

அந்தப் பள்ளியின் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடன் கத்ரீனா ஆடிய நடனம்தான் தற்போது ட்விட்டரில் வைரல் ஆகி வருகிறது. அதுவரை மதுரை வரக் காரணம் அவரின் அம்மாதான்

Katrina kaif : தன் அம்மாவின் ஆசை; மும்பையிலிருந்து மதுரை வந்த கத்ரீனா கைஃப்; பின்னணி இதுதான்!

அந்தப் பள்ளியின் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடன் கத்ரீனா ஆடிய நடனம்தான் தற்போது ட்விட்டரில் வைரல் ஆகி வருகிறது. அதுவரை மதுரை வரக் காரணம் அவரின் அம்மாதான்

Published:Updated:
கத்ரீனா கைஃப் தன் அம்மாவுடன்
தமிழகத்திலுள்ள பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் `அரபிக் குத்து' பாடலுக்கு நடனமாடும் வீடியோதான் தற்போதைய வைரல். வேறெந்த திரைப்பிரபலங்களும் அந்த நிகழச்சியில் கலந்துகொள்ளவில்லை. மும்பையிலிருந்து கத்ரீனா கைஃப் தமிழகத்திலுள்ள பள்ளி நிகழ்ச்சியில் ஏன் கலந்துகொண்டார் என்ற கேள்விகள் இணையம் முழுக்க வலம் வருகின்றன. அது என்ன காரணம் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
கத்ரீனா கைஃப்
கத்ரீனா கைஃப்

மதுரையை அடுத்துள்ள தொட்டப்பநாயக்கனூரில் அமைந்துள்ளது `மவுன்ட் வியூ' பள்ளி. அந்தப் பள்ளியின் தொடக்க நாள் விழா நிகழ்ச்சிக்காகத்தான் கத்ரீனா கைஃப் அங்கு வந்திருந்தார். தொடக்க நாள் விழா நிகழ்ச்சிக்காக அந்தப் பள்ளியின் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடன் அவர் ஆடிய நடனம்தான் தற்போது ட்விட்டரில் வைரல் ஆகி வருகிறது.

அந்தப் பள்ளிக்கும் கத்ரீனாவின் குடும்பத்துக்கும் நீண்ட நாள் தொடர்பு உள்ளது. கிராமப் புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தன்னார்வல அமைப்பு தான் ரிலீப் புராஜெக்ட் இந்தியா. 2009ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு தான், 2015 இல் மதுரைக்கு அருகேயுள்ள தொட்டப்பநாயக்கனூரில் கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்காக மவுண்ட் வியூ பள்ளியினை தோற்றுவித்தது.

கத்ரீனா கைஃப் தன் அம்மாவுடன்
கத்ரீனா கைஃப் தன் அம்மாவுடன்

கத்ரீனா கைஃபின் அம்மா மேரி சுசானா டர்கோட்டி இந்த ரிலீப் புராஜெக்ட் இந்தியா அமைப்பின் குழு உறுப்பினராகவும், மேலும் மவுண்ட் வியூ பள்ளியின் கல்வி ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். மேரி சுசானா லண்டனில் பிறந்தவர். கத்ரீனாவின் தந்தை காஷ்மீரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சுசானா பல தன்னார்வ நிறுவனங்களில் செயல்பட்டு வருபவர். அப்படியாகத்தான் இந்தப் பள்ளியைத் தொடங்கியதிலும் அவரின் பங்களிப்பு இருந்திருக்கிறது.

இதன் காரணமாகவே நேற்று நடைபெற்ற `மவுன்ட் வியூ' பள்ளியின் தொடக்க விழாவில் கத்ரீனா கைஃப் அவர் அம்மா மேரி சுசானா டர்கோட்டியுடன் கலந்துகொண்டார். அவர் விழாவில் கலந்துக்கொண்டு அரபி குத்து பாட்டிற்கு நடனமாடியதை யாரோ வீடியோவாக எடுத்து வெளியிட அது தற்போது வைரலாகியிருக்கிறது.

இந்த ரிலீப் புராஜெக்ட் இந்தியா அமைப்பிற்கு பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு 2020ல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது இந்நிகழ்ச்சி குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், "மவுன்ட் வியூ பள்ளியின் தொடக்க நாள் விழா நிகழ்ச்சியை அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் நிதியளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

கத்ரீனா கைஃப்
கத்ரீனா கைஃப்

அவர்களால் தான் இன்று மூன்று வகுப்பறைகளை திறக்க முடிந்தது. இந்தப் பள்ளியை நிர்வகித்து வரும் என்னுடைய அம்மாவையும், தம்பியையும் பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இந்தப் பள்ளி மிகவும் அழகாக உள்ளது" என்று தெரிவித்திருந்ததார்.

இதற்கு பாலிவுட் நடிகர்களான ஹிர்த்திக் ரோஷன், ரன்வீர் சிங், அனுஷ்கா ஷர்மா ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.