Published:Updated:

`எனக்கு எதாவது ஆச்சுன்னா அவர்தான் காரணம்'- முன்னணி நடிகர் மீது தனுஸ்ரீ தத்தா குற்றச்சாட்டு

தனுஸ்ரீ தத்தா

நடிகை தனுஸ்ரீ தத்தா, ‘எனக்கு எதாவது ஆச்சுன்னா இந்த நடிகர்தான் காரணம்’ என்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார்.

`எனக்கு எதாவது ஆச்சுன்னா அவர்தான் காரணம்'- முன்னணி நடிகர் மீது தனுஸ்ரீ தத்தா குற்றச்சாட்டு

நடிகை தனுஸ்ரீ தத்தா, ‘எனக்கு எதாவது ஆச்சுன்னா இந்த நடிகர்தான் காரணம்’ என்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார்.

Published:Updated:
தனுஸ்ரீ தத்தா

2018ம் ஆண்டு 'metoo' மூலம் பாலியல் குற்றச்சாட்டுகளை பலரும் முன் வைத்த போது, ஆஷிக் பனாயா ஆப்னே படத்தின் நடிகையான தனுஸ்ரீ தத்தாவும் நடிகர் நானா படேகர் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக metoo மூலம் குற்றம் சாட்டி இருந்தார். கடந்த வாரம் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "தான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் அழுத்தத்தில் இருக்கிறேன். அதற்காக நான் தற்கொலை செய்து கொள்ளமாட்டேன். நான் குறிவைத்து மிகவும் மோசமாக துன்புறுத்தப்படுகிறேன். தயவுசெய்து யாராவது உதவி செய்யுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று பிரபல நடிகர் நானா படேகர் மற்றும் பாலிவுட் மாஃபியா தன்னை துன்புறுத்துவதாகவும், திரைப்படத்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்கள் தன் மீது பொய்யான செய்திகளை பரப்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் தனக்கு எதாவது ஆனால், metoo விவகாரத்தில் தான் குற்றம் சாட்டிய நடிகர் நானா படேகர், அவரின் வழக்கறிஞர் மற்றும் அவரது பாலிவுட் மாஃபியா நண்பர்கள்தான் அதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பாலிவுட் மாஃபியா நண்பர்கள் என்பது சுஷாந்த் சிங் ராஜ்புத் (SSR) மரண வழக்கில் அடிக்கடி அடிபட்டு வந்த அதே நபர்கள்தான் அவர்களின் திரைப்படங்களைப் பார்க்காதீர்கள். என்னைப் பற்றி போலிச் செய்திகளைப் பரப்பும் அனைத்து திரைத்துறையினரையும் பத்திரிகையாளர்களையும் பிடிக்க வேண்டும்" என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், சட்டமும் நீதியும் தன்னைத் தோற்கடித்திருக்கலாம். ஆனால் இந்த தேசத்தின் மக்கள் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தத்தா அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!