ஆர்யன் கான் கைது பிரச்னை: வெளிநாட்டுப் பயணம் ரத்து... ஷாருக்கான் உடனே இணைந்து பணியாற்றப்போகும் மகன்!

கைது பிரச்னையால் தனது தந்தையுடன் சேர்ந்து படத்தயாரிப்பு பணிகளைக் கற்றுக்கொள்ள ஆர்யன் கான் முடிவு செய்துள்ளார்.

Published:Updated:
ஷாருக்கான், ஆர்யன் கான்
ஷாருக்கான், ஆர்யன் கான்
Google Preference
0Comments
Share
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், கடந்த அக்டோபர் தொடக்கத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் வரை சிறையில் அடைக்கப்பட்டார். இக்கைது விவகாரத்தால் ஷாருக்கான் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு தனது மகனை சிறையில் இருந்து வெளியில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஷாருக்கான் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டார்.
ஆர்யன் கான்
ஆர்யன் கான்

தற்போது ஆர்யன் கான் சிறையில் இருந்து வெளியில் வந்து வழக்கமான பணிகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். அவர் ஒவ்வொரு வாரமும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகவேண்டும் என்ற நிபந்தனையும் தளர்த்தப்பட்டுள்ளது. ஆர்யன் கான் வெளிநாடு சென்று திரைப்படம் தயாரிப்பு தொடர்பாக பயிற்சியில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார். ஆனால், அவரை ஜாமீனில் விடுவிக்க நிபந்தனை விதித்த உயர்நீதிமன்றம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளது. எனவே ஆர்யன் கான் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மும்பையிலேயே மகன் ஆர்யன் கானை படத்தயாரிப்பு பயிற்சியில் கலந்து கொள்ளவைக்க ஷாருக்கான் முடிவு செய்துள்ளார். யஷ் ராஜ் ஸ்டூடியோ ஆதித்ய சோப்ரா மற்றும் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் ஷாருக்கானுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்களில் ஒருவரிடம் ஆர்யன் கானைத் தயாரிப்பு பயிற்சிக்கு அனுப்ப ஷாருக்கான் முடிவு செய்துள்ளார்.

ஷாருக்கான்
ஷாருக்கான்

ஷாருக்கான், தனது படங்களை பெரும்பாலும் தனது ரெட் சில்லிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். எனவே தனது படத்தயாரிப்புகளிலும் ஆர்யன் கானை ஈடுபடுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளார். அதோடு ஷூட்டிங்கிலிருந்தும் தற்காலிக பிரேக்கிலிருக்கும் ஷாருக்கான், தன்னுடைய அடுத்த புராஜெக்டான 'பதான்' படத்தின் படப்பிடிப்பு பணிகளிலும் தற்போது ஈடுபட முடிவு செய்துள்ளார்.

Loading...
Vikatan

விகடனின் கிளாசிக் படைப்புகள் இப்போது ஆடியோ புத்தகங்களாக!