Published:Updated:

அமிதாப் பேரன்; ஸ்ரீதேவியின் 2-வது மகள் நடிக்கும் வெப் சீரிஸ் `இயக்குநர்' ஆர்யன் கான்!

ஆர்யன் கான்

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் வெப் சீரியல் இயக்குநராக அறிமுகமாகிறார்.

அமிதாப் பேரன்; ஸ்ரீதேவியின் 2-வது மகள் நடிக்கும் வெப் சீரிஸ் `இயக்குநர்' ஆர்யன் கான்!

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் வெப் சீரியல் இயக்குநராக அறிமுகமாகிறார்.

Published:Updated:
ஆர்யன் கான்

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கடந்த ஆண்டு போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி வெளியில் வந்த பிறகு இப்போது தனது இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். ஏற்கெனவே ஐபிஎல் அணி வீரர்கள் தேர்வில் கவனம் செலுத்திய ஆர்யன் கான் தற்போது இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார். ஆரம்பத்தில் திரைப்படத்தை இயக்குவதா அல்லது வெப் சீரிஸ் இயக்குவதா என இரண்டு மன நிலையில் இருந்த ஆர்யன் கான் இப்போது வெப் சீரிஸ் இயக்க முடிவு செய்திருக்கிறார். இதில் ஓரளவு அனுபவம் கிடைத்த பிறகு அடுத்த கட்டமாக திரைப்படத்தில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறார். வெப் சீரிஸுக்காக சமீபத்தில் ஆர்யன் கான் ஒத்திகை படப்பிடிப்பை நடத்திப் பார்த்திருக்கிறார். மும்பையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் இரண்டு நாட்கள் இந்த படப்பிடிப்பு நடந்துள்ளது.

ஆர்யன் கான்
ஆர்யன் கான்

படப்பிடிப்பின்போது அனைத்து வேலைகளையும் ஆர்யன் கான் தனது கட்டுப்பாட்டில் எடுத்துச் செய்ததாக உடன் பணியாற்றியவர்கள் தெரிவித்தனர். புராஜெக்ட் குறித்து அனைவரும் முழுமையாகப் புரிந்துகொண்ட பிறகு பணிகளைத் தொடங்கவேண்டும் என்று இதில் தொடர்புடையவர்களிடம் ஆர்யன் கான் தெரிவித்திருக்கிறார். வெப் சீரிஸுக்காக கதையையும் ஆர்யன் கான் எழுதித் தயாரிக்கவும் செய்கிறார். படப்பிடிப்பில் நடிகர் பிரித் கமானியும் கலந்துகொண்டார். எனவே அவரும் வெப் சீரிஸில் நடிக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளை ஆர்யன் கான் தொடங்கிவிட்டதாகவும், படப்பிடிப்புக்கான தேதியையும் ஆர்யன் கான் முடிவு செய்துவிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. மற்றொரு புறம் ஆர்யன் கான் சகோதரி சுஹானா கானும் வெப் சீரியலில் நடிக்க இருக்கிறார். இதில் நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர், அமிதாப்பச்சன் பேரன் அகஸ்தா நந்தா ஆகியோரும் நடிக்க இருக்கின்றனர் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.