Published:Updated:

ரஜினிக்குப் பிறகு தாதாசாகேப் பால்கே விருது பெறும் பழம்பெரும் பாலிவுட் நடிகை - யார் இந்த ஆஷா பரேக்?

ஆஷா பரேக்

2020ம் ஆண்டிற்கான இந்தியத் திரைப்படத் துறையின் மிக உயரிய விருதான ‘தாதாசாகேப் பால்கே விருது’ மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிக்குப் பிறகு தாதாசாகேப் பால்கே விருது பெறும் பழம்பெரும் பாலிவுட் நடிகை - யார் இந்த ஆஷா பரேக்?

2020ம் ஆண்டிற்கான இந்தியத் திரைப்படத் துறையின் மிக உயரிய விருதான ‘தாதாசாகேப் பால்கே விருது’ மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
ஆஷா பரேக்
இந்தியத் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்தவர்களுக்கு வழங்கப்படுவது ‘தாதாசாகேப் பால்கே விருது’. 2020-ம் ஆண்டிற்கான விருது பாலிவுட்டின் பழம்பெரும் நடிகையான ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.

79 வயதாகும் பாலிவுட் நடிகையான ஆஷா பரேக், தனது சிறு வயது முதலே நடிக்கத் தொடங்கியவர். 1960 மற்றும் 1970களில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் நடித்த 'Dil Deke Dekho', Kati Patang', 'Teesri Manzil', 'Caravan' போன்ற படங்கள் மூலம் இன்றளவும் பேசப்பட்டு வரும் நடிகையாக இருப்பவர். நடிகையாக மட்டுமல்ல இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பாலிவுட்டில் வலம் வந்தவர்.

ஆஷா பரேக்
ஆஷா பரேக்

தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற இவர் தற்போது, இந்தியத் திரைப்படத் துறையின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதினையும் தன் வசமாக்கியுள்ளார். இந்நிலையில் திரைத்துறை சார்ந்த பலரும் நடிகை ஆஷா பரேக்கிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன் 2019ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்த்திற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.