Published:Updated:

கங்கனா ரணாவத்தின் லாக்அப் ரியாலிட்டி ஷோ: தடையை நீக்கிய நீதிமன்றம்; தொடங்குகிறது 24 மணிநேர ஒளிபரப்பு!

கங்கனா ரணாவத்

நடிகை கங்கனா ரணாவத்தின் ரியாலிட்டி ஷோவிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் திட்டமிட்டபடி நிகழ்ச்சி தொடங்கியது.

கங்கனா ரணாவத்தின் லாக்அப் ரியாலிட்டி ஷோ: தடையை நீக்கிய நீதிமன்றம்; தொடங்குகிறது 24 மணிநேர ஒளிபரப்பு!

நடிகை கங்கனா ரணாவத்தின் ரியாலிட்டி ஷோவிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் திட்டமிட்டபடி நிகழ்ச்சி தொடங்கியது.

Published:Updated:
கங்கனா ரணாவத்

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் முதல் முறையாக ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்துகிறார். 'லாக்அப்' என்ற அந்த நிகழ்ச்சிக்கு எதிராக ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். தனது ஐடியாவை திருடி 'லாக்அப்' ரியாலிட்டி ஷோ தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து ஐதராபாத் நீதிமன்றம் 'லாக்அப்' நிகழ்ச்சியை தொடங்க தடை விதித்தது. இதனால் திட்டமிட்டபடி நிகழ்ச்சி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்

இந்நிகழ்ச்சியை தயாரித்து வரும் பாலாஜி டெலிபிலிம் நிறுவனத்தின் ஏக்தா கபூர் கோர்ட்டில் தடையை நீக்கவேண்டும் என்று கேட்டு சிறப்பு மனுவை தாக்கல் செய்தார். அதனை விசாரித்த கோர்ட் தடையை நீக்கி உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று திட்டமிட்டபடி லாக்அப் நிகழ்ச்சி தொடங்கியது. 'லாக்அப்'பில் பங்கேற்க இருப்பவர்கள் மற்றும் கங்கனா ரணாவத் ஆகியோரின் மேடை நிகழ்ச்சிகளுக்கான ஷூட்டிங் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து லாக்அப்பில் 16 போட்டியாளர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதில் காமெடி நடிகர் முனாவார் பரூக்கி, சுனில் பால், திருநங்கை டிசைனர் சாய்ஷா ஷிண்டே, நடிகை பூனம் பாண்டே, நடிகை சாரா கான், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாயல் உட்பட 16 பேர் இதில் பங்கேற்கின்றனர். இதில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது என்று ஏற்கெனவே கங்கனா தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 16 பேரும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கியவர்கள்தான். இவர்களைத் தவிர பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் சிறப்பு விருந்தினாராகக் கலந்துகொண்டு, ஒரு நாள் ஜெயிலராக கங்கனாவின் ரோலைச் செய்யவிருக்கிறார்.

லாக் அப் போட்டியாளர்கள்
லாக் அப் போட்டியாளர்கள்

லாக்அப்பில் பங்கேற்பவர்கள் மீது கூறப்படும் குற்றங்கள் விசாரிக்கப்பட்டு உள்ளேயே தண்டனை வழங்கப்படும். பார்வையாளர்களும் இதில் கருத்து தெரிவிக்கலாம். போட்டியாளர்கள் மொத்தம் 72 நாள்கள் லாக்அப்பில் இருக்கவேண்டும். லாக்அப்பில் அதிக நாள்கள் இருப்பவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். பிக் பாஸ் போன்று இதிலும் போட்டியாளர்கள் படிப்படியாக வெளியேற்றப்படுவர். இன்று இரவு தொடங்கி, 24 மணி நேரமும் ஓடும் இந்த ரியாலிட்டி ஷோவை ஆல்ட் பாலாஜி மற்றும் எம்எக்ஸ் பிளேயர் ஆகிய இரண்டிலும் பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism