Published:Updated:

BHEED: `ஆர்டிகள் 15' இயக்குநரின் அடுத்த பட டிரெய்லர் யூடியூபில் நீக்கம்; அரசை விமர்சித்தது காரணமா?

பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த பின் 'Bheed' படத்தின் டிரெய்லர் வீடியோ யூடியூபிலிருந்து நீக்கப்பட்டு தற்போது 'private'-ற்கு மாற்றப்பட்டுள்ளது.

Published:Updated:

BHEED: `ஆர்டிகள் 15' இயக்குநரின் அடுத்த பட டிரெய்லர் யூடியூபில் நீக்கம்; அரசை விமர்சித்தது காரணமா?

பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த பின் 'Bheed' படத்தின் டிரெய்லர் வீடியோ யூடியூபிலிருந்து நீக்கப்பட்டு தற்போது 'private'-ற்கு மாற்றப்பட்டுள்ளது.

`ஆர்டிகள் 15', `முல்க்', தப்பட்' படங்கள் மூலமாகக் கவனம் ஈர்த்த இயக்குநர் அனுபவ்  சின்ஹா இயக்கத்தில் வெளியாகவுள்ள புதிய படம் `Bheed' (கும்பல்). இப்படத்தில் ராஜ்குமார் ராவ், பூமி பெட்னேகர், அஷுதோஷ் ராணா, தியா மிர்சா, வீரேந்திர சக்சேனா, பங்கஜ் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
Bheed
Bheed

வரும் மார்ச் 20-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் யூடியூபில் வெளியானது. பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த பின் அது யூடியூபிலிருந்து நீக்கப்பட்டு தற்போது private-ற்கு மாற்றப்பட்டுள்ளது. இது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படம் மோடி அரசின் கொரோனா காலச் செயல்பாடுகளை விமர்சித்து எடுக்கப்பட்டிருப்பதுதான் காரணம் என ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.

2020-ல் கொரோனாவால் இந்தியாவில் போடப்பட்ட லாக்டௌனால் புலம்பெயர்த் தொழிலாளர்கள் சந்தித்த அவலங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கோவிட் லாக்டௌனில் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள், அந்தச் சமயத்தில் மக்கள் சந்தித்த பிரச்னைகள், கொரோனா குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாமல் மக்களை அகதிகள் போல அலைக்கழித்த காவல்துறையினர், அரசாங்கத்தின் நிர்வாகம் போன்ற அனைத்தையும் விமர்சிக்கும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது என்று பலரும் டிரெய்லரைப் பாராட்டினாலும், சிலர், இந்த டிரெய்லர் தேவையின்றி லாக்டௌன் பற்றிய எதிர்மறையான விஷயங்களைக் கொண்டிருக்கிறது என்று கடுமையாக விமர்சித்தும் வந்தனர்.

BHEED
BHEED

அதேபோல் அப்போது நடந்த புலம்பெயர்வை, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த பிரிவினையை ஒப்பிட்டும் வசனங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் 'Bheed' படத்தின் டிரெய்லர் வீடியோ private-ற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் நெட்டிசன்கள் பலரும், 'மக்களின் பிரச்னைகளை எடுத்துரைக்கக்கூட இங்கு உரிமை இல்லையா? இது ஜனநாயக நாடுதானா?' என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். வீடியோ அகற்றப்பட்டது குறித்துத் தயாரிப்பு நிறுவனம் இதுவரை எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.