Published:Updated:

"பெண் நடிகைகள் என்று வந்தால் மட்டும்" - Badhaai Do கதாநாயகி பூமி பட்னேகர் காட்டம்!

பூமி பட்னேகர்

"பெண் நடிகைகள் என்று வந்தால் மட்டும் தான் இவர்களுக்கு கொரோனா காலம் என்பது நினைவுக்கு வரும்." - பூமி பட்னேகர்

"பெண் நடிகைகள் என்று வந்தால் மட்டும்" - Badhaai Do கதாநாயகி பூமி பட்னேகர் காட்டம்!

"பெண் நடிகைகள் என்று வந்தால் மட்டும் தான் இவர்களுக்கு கொரோனா காலம் என்பது நினைவுக்கு வரும்." - பூமி பட்னேகர்

Published:Updated:
பூமி பட்னேகர்

திரைப்படத் துறையில் ஆண்-பெண் என ஏற்றத்தாழ்வுகள் பார்ப்பது அதிகம் எனத் தொடர்ச்சியாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் Badhaai Do படத்தின் கதாநாயகி பூமி பட்னேகர் அளித்துள்ள நேர்காணல் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா காலத்தில் கதாநாயகிகள் தாங்கள் வாங்கும் சம்பளத்தைக் குறைத்துகொள்ளக் கேட்கப்பட்டது பற்றிக் கடுமையாகப் பேசியுள்ளார்.

"பெண் நடிகைகள் என்று வந்தால் மட்டும் தான் இவர்களுக்கு கொரோனா காலம் என்பது நினைவுக்கு வரும். எந்தத் தயாரிப்பாளரும் என்னுடன் நடிக்கும் ஆண் கதாநாயகரிடம் சென்று, 'உங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். இது கொரோனா காலம் என்பதை மறந்துவிடாதீர்கள்' எனச் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை. இப்படி ஒருபோதும் நடக்காது. ஆனால் எங்களிடமிருந்து மட்டும் சம்பளக்குறைவை எதிர்பார்ப்பார்கள், இதனை கொடுமையான ஒன்றாக நான் பார்க்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

ராஜ்குமார் ராவ் | டைரக்டர் ஹர்ஷவர்தன் | பூமி பட்னேகர்
ராஜ்குமார் ராவ் | டைரக்டர் ஹர்ஷவர்தன் | பூமி பட்னேகர்

Badhaai Do படத்தில் ஓர்பால் ஈர்ப்புள்ளவராக நடித்துள்ள பூமிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்து மழை பொழிகிறது. "இந்த டிஜிட்டல் யுகத்தில் நீங்கள் செய்த பணிக்கான விமர்சனங்கள் உடனே கிடைத்த்துவிடும், Badhaai Do படத்திற்கு வரும் அழகான வாழ்த்து செய்திகள் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நாங்கள், ரியாலிட்டி என்னவோ அதை சொல்ல விரும்பினோம். அப்போ தான் மக்கள் மாற்றத்திற்காக ஒன்றாக இணைய முடியும்" எனத் தெரிவித்திருக்கிறார். ராஜ்குமார் ராவ், பூமி பட்னேகர் நடித்த இந்தப் படம் பிப்ரவரி 11 திரையில் வெளியானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism