Published:Updated:

`சத்ருகன் சின்ஹா எனது கன்னித்தன்மையை விற்று மகளை நடிகையாக்கினார்'- பிக்பாஸ் நடிகை பூஜா மிஸ்ரா புகார்

பூஜா மிஸ்ரா, சத்ருகன் சின்ஹா, பூனம்

நடிகர் சத்ருகன் சின்ஹா எனது கன்னித்தன்மையை விற்று சோனாக்‌ஷி சின்ஹாவை நடிகையாற்றினார் என்று பிக்பாஸ் நடிகை பூஜா மிஸ்ரா தெரிவித்தார்.

`சத்ருகன் சின்ஹா எனது கன்னித்தன்மையை விற்று மகளை நடிகையாக்கினார்'- பிக்பாஸ் நடிகை பூஜா மிஸ்ரா புகார்

நடிகர் சத்ருகன் சின்ஹா எனது கன்னித்தன்மையை விற்று சோனாக்‌ஷி சின்ஹாவை நடிகையாற்றினார் என்று பிக்பாஸ் நடிகை பூஜா மிஸ்ரா தெரிவித்தார்.

Published:Updated:
பூஜா மிஸ்ரா, சத்ருகன் சின்ஹா, பூனம்

நடிகை சத்ருகன் சின்ஹா மீது பிக்பாஸ் நடிகை பூஜா மிஸ்ரா பரபரப்பு குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருக்கிறார். ஒரு சில படங்களில் நடித்துள்ள பூஜா மாடலிங்காகவும் வேலை செய்துள்ளார். அவர் சத்ருகன் சின்ஹா மீது அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது, "நடிகர் சத்ருகன் சின்ஹா எனது வாழ்க்கையைச் சீரழித்துவிட்டார். என்னை மயக்கமடையச் செய்து என்னை வைத்துப் பாலியல் தொழில் செய்தனர். எனது கன்னித்தன்மையை விற்பனை செய்து பேஷன் டிசைனராக மாற இருந்த தன் மகளை நடிகையாக்கினார். எனக்கு எதிராக சத்ருகன் சின்ஹா பில்லிசூனியம் செய்துள்ளார். ஒரு காலத்தில் என் தந்தையும், சத்ருகன் சின்ஹாவும் நல்ல நண்பர்களாக இருந்தனர். சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூனம் என் தந்தையை மூளைச்சலவை செய்து பாலிவுட்டில் விபசாரம் மட்டுமே உதவும் என்று கூறி என்னை அத்துறையில் நுழையவிடாமல் தடுத்துவிட்டனர்.

பூஜா மற்றும் சத்ருகன் குடும்பம்
பூஜா மற்றும் சத்ருகன் குடும்பம்

என் தந்தை 2005-ம் ஆண்டு ஓய்வு பெற்றுவிட்டார். அதன் பிறகு புனேவிற்குச் சென்றுவிட்டார். ஆனால் என்னை சத்ருகன் சின்ஹாவும், அவர் மனைவியும் மும்பையில் தொடர்ந்து தங்கும்படி நிர்பந்தம் செய்தனர். சத்ருகன் சின்ஹாவும் அவர் மனைவியும் சேர்ந்து என்னிடமிருந்து 35 படங்களைத் திருடிவிட்டனர். சத்ருகன் சின்ஹா குடும்பம் ஒரு பேராசை பிடித்தது. சத்ருகன் சின்ஹாவும், அவர் மனைவியும் எனது வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து எனது ஸ்பான்சர்களின் பட்டியலைத் திருடிவிட்டனர். ஒரு முறை சத்ருகன் சின்ஹாவின் பிறந்த நாளுக்கு நான் சென்ற போது எனக்கு எதையோ கொடுத்து சாப்பிடச் செய்து எனக்கு பில்லிசூனியம் வைத்தனர். 2007-14 வரை லோகண்ட்வாலாவில் உள்ள எனது வீட்டில் தங்கியிருந்தேன். எங்களது வீட்டிற்கு மேல் சத்ருகன் சின்ஹா தங்கியிருந்தார். நான் சிங்கப்பூரில் ஷாப்பிங் முடித்து வந்தால் அவர்கள் அந்தப் பொருள்களைத் திருடிவிடுவர். சத்ருகன் சின்ஹாவால்தான் நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. சத்ருகன் சின்ஹா அடிக்கடி எனக்கு போதைப்பொருளைக் கொடுத்து சாப்பிடச்செய்தார். நான் பாலிவுட்டில் வெற்றிபெற முடியாமல் போனதற்கு காரணம் சத்ருகன் சின்ஹாவைத் தவிர வேறு யாரும் கிடையாது. இதனால் 17 ஆண்டுகளை இழந்துவிட்டேன்" என்று தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism