Published:Updated:

சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்த பிஸ்னோய்; தொழிலதிபர்கள், நடிகர்களை மிரட்டி பணம் பறிக்கத் திட்டம்!

சல்மான் கான்

நடிகர் சல்மான் கான் மற்றும் அவரின் தந்தைக்கு லாரன்ஸ் பிஸ்னோய் மிரட்டல் கடிதம் அனுப்பியது ஏன் என்பது குறித்து மகாராஷ்டிரா உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருக்கிறது.

சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்த பிஸ்னோய்; தொழிலதிபர்கள், நடிகர்களை மிரட்டி பணம் பறிக்கத் திட்டம்!

நடிகர் சல்மான் கான் மற்றும் அவரின் தந்தைக்கு லாரன்ஸ் பிஸ்னோய் மிரட்டல் கடிதம் அனுப்பியது ஏன் என்பது குறித்து மகாராஷ்டிரா உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருக்கிறது.

Published:Updated:
சல்மான் கான்
கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தை சலீம் கானுக்கு மர்ம நபர் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பி இருந்தார். மும்பை பாந்த்ரா கடற்கரையில் தினமும் சலீம் கான் நடைபயிற்சி சென்றுவிட்டு அங்குள்ள ஒரு இருக்கையில் அமருவது வழக்கம். அவ்வாறு உட்காரும் இருக்கையில் அந்த மிரட்டல் கடிதம் வைக்கப்பட்டிருந்தது. அதனை சலீம் கான் பாதுகாவலர் கண்டுபிடித்து சலீம் கானிடம் கொடுத்தார்.

இதுகுறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. இந்த கொலை மிரட்டலில் பஞ்சாப் பாடகர் சிது மூஸ்வாலாவை படுகொலை செய்த லாரன்ஸ் பிஸ்னோய் கூட்டத்தினருக்குத் தொடர்பு இருப்பது மும்பை போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மும்பை போலீஸார் டெல்லி சென்று விசாரித்து வந்தனர். பிஸ்னோய் கூட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர் ராஜஸ்தானில் இருந்து மிரட்டல் கடிதம் எடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

லாரன்ஸ் பிஸ்னோய்
லாரன்ஸ் பிஸ்னோய்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏற்கனவே 2018-ம் ஆண்டு ராஜஸ்தான் கோர்ட் வாசலில் லாரன்ஸ் பிஸ்னோய் நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா போலீஸார் தற்போது சல்மான் கான் மற்றும் அவரின் தந்தைக்கு வந்த மிரட்டல் கடிதம் குறித்து விசாரித்ததில் லாரன்ஸ் பிஸ்னோய் கூட்டத்தினர் எதற்காக மிரட்டல் கடிதம் அனுப்பினர் என்று தெரிய வந்திருக்கிறது. மிரட்டல் கடிதத்தில் G.B மற்றும் L.B என்ற எழுத்துக்கள் இருந்தன. இந்த எழுத்துக்களுக்கு கோல்டி பிரர் மற்றும் லாரன்ஸ் பிஸ்னோய் என்று அர்த்தமாகும். இதில் கோல்டி பிரர் கனடாவில் இருக்கிறான். லாரன்ஸ் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாக மகாராஷ்டிரா உள்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தியில், லாரன்ஸ் பிஸ்னோய் கூட்டத்தினர் தங்களை பலத்துடன் இருப்பதாகக் காட்டிக்கொள்வதற்காக இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் லாரன்ஸ் கூட்டத்தினர் தொழிலதிபர்கள் மற்றும் சினிமா நடிகர்களை மிரட்டி பணம் பறிக்கத் தயாராகி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். கொலை மிரட்டல் சம்பவத்தை தொடர்ந்து எச்சரிக்கையுடன் நடித்துக் கொள்ளும்படி சல்மான் கானிடம் மும்பை போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். அதோடு வெளியில் எங்கு சென்றாலும் அதனை ரகசியமாக வைத்துக்கொள்ளும்படியும் போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் சல்மான் கான் மிரட்டலைப் பற்றி கவலையின்றி ஹைதராபாத்திற்கும், படப்பிடிப்புகளுக்கும் சுற்றிக்கொண்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism