Published:Updated:

The Kashmir Files: 'எதிர்காலத்தில் பலரும் அவர்களின் பார்வையில் படம் எடுப்பார்கள்' நவாஸுதீன் சித்திக்

நவாஸுதீன் சித்திக்

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் குறித்து பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்துவரும் நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகரான நவாஸுதீன் சித்திக்கும் இப்படம் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

The Kashmir Files: 'எதிர்காலத்தில் பலரும் அவர்களின் பார்வையில் படம் எடுப்பார்கள்' நவாஸுதீன் சித்திக்

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் குறித்து பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்துவரும் நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகரான நவாஸுதீன் சித்திக்கும் இப்படம் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
நவாஸுதீன் சித்திக்

1990-களில் நடந்த காஷ்மீர் இந்து பண்டிட்களின் வெளியேற்றம் மற்றும் கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் கடந்த மார்ச் 11-ல் வெளியானது. வெளியானது முதல் இப்படம் நாடு முழுவதும் பேசுபொருளானது. இப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன. திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகரான நவாஸுதீன் சித்திக் இப்படம் குறித்துப் பேசியுள்ளார்.

 இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, நவாஸுதீன்
இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, நவாஸுதீன்

படம் குறித்துg; பேசிய நவாஸுதீன், "இப்படத்தை மக்கள் பார்ப்பதாகவும் எனவே தானும் இப்படத்தை நிச்சியம் பார்ப்பேன்" என்றறவர் மேலும் தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை பாலிவுட்டில் பலர் விமர்சித்து வருகிறார்கள் என்று கேட்டபோது பதிலளித்த அவர், "ஒவ்வொரு இயக்குநருக்கும் படம் எடுப்பதற்கு ஒரு பாணியும் பார்வையும் இருக்கும், அவர் தனது பார்வையில் ஒரு படம் எடுத்திருக்கிறார். அது நல்லதுதான்" என்று கூறினார். மேலும் "எதிர்காலத்தில் மற்றவர்களும் அவர்களின் பார்வையில் படம் எடுப்பார்கள். இதுபோன்று நடப்பது மிகவும் நல்லதான்" எனக் கூறியிருக்கிறார். மேலும் 'ஒரு படைப்பாளி திரைப்படத்தை உருவாக்கும்போது, அவர் தனது பார்வையில், விஷயங்களைப் பார்க்கும் தனித்துவமான பாணியுடன் உருவாக்குகிறார். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படங்களில்கூட எந்தவொரு படைப்பாளியும் தங்கள் சொந்தக் கண்ணோட்டத்தைச் சேர்க்க அனுமதிக்கப்பட வேண்டும்" என்றார் நவாஸுதீன் சித்திக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism