நடிகர் ஷாருக்கான் பாலிவுட்டில் மட்டுமல்ல இந்திய முழுவதும் ஏராளமான ரசிகர்களைக்கொண்டவர். 2018-ல் ஜீரோ எனும் படம் தான் அவர் கடைசியாக நடித்து வெளிவந்த படம் . அவர் செப்டம்பர் மாதம் 23.2021 டிவிட்டரில் தனது டிஸ்னி + ஹாட்ஸ் ஸ்டார் விளம்பரத்தை ரீ -ட்வீட் செய்தது தான், அதன்பின் 3 ஆண்டுகளாக அவரின் எந்த படமும் வரவில்லை சமூக ஊடகங்களிலும் எந்த பதிவும் இடுவதில்லை .
கடந்த ஆண்டு அக்டோபர் 2021-ல் மும்பையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் சமூக ஊடகங்களில் ஷாருக்கான் எந்த பதிவும் இடுவதில்லை. இன்ஸ்டாகிராமில் 19 செப்டம்பர் 2021 க்குப்பிறகு இரண்டு நாட்களுக்கு முன்புதான் அதாவது 19.01.2022 அன்று இன்ஸ்டாகிராமில் தான் நடித்த LG நிறுவனத்தின் விளம்பரத்தைப் பதிவிட்டுள்ளார். இது அவர் மகன் ஆரியன் கானின் ஜாமீனிற்குப் பிறகு வெளியிடும் முதல் இன்ஸ்டாகிராம் பதிவாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதைத் தொடர்ந்து ரசிகர்கள் ஷாருக்கானின் காணொளிகளையும் புகைப்படங்களையும் பதிவிட்டு சமூக ஊடகங்களில் தங்களின் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளை வெளிப்படுத்தி #WeMissYouSRK என்னும் ஹாஷ்ட்டகை டிவிட்டரில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.
அவர் ரசிகர்களில் ஒருவர் “அவரது கடைசி படம் வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன,கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக அவர் சமூக ஊடகங்களில் இல்லை. அவரது பிறந்த நாள் மற்றும் புத்தாண்டிற்குக்கூட எந்த ட்வீட்டும் இல்லை. அவரை காணாமல் ரசிகர்கள் மிகவும் ஏங்குகிறார்கள்” என அந்த ரசிகர் டிவிட்டரில் கூறியிருந்தார். இது போல ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்களின் உணர்ச்சிகளை #WeMissYouSRK என்னும் ஹேஷ்டாக் உடன் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தற்போது அவர் பதன் (pathan) என்னும் படத்தின் வேலைகளில் ஈடுபாட்டுடன் இருக்கிறார். மேலும் தனது அடுத்த படத்தை இயக்குநர் அட்லீயுடன் இணைந்து பண்ணவும் திட்டமிட்டுள்ளார் என சிலர் பதிவிட்டுள்ளனர்.